ADVERTISEMENT
கமல்ஹாசனின் “சத்யா” திரைப்படம் ரீமேக்..!! அசோக் செல்வன் நடிப்பில்..!
உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் 1988ல் வெளிவந்த சத்யா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தற்போது சத்யா திரைப்படம் ரீமேக் ஆகிறது, இதில் அசோக் செல்வன் ஹீரோவாக நடிக்கிறார்.
இப்படத்தில் இளையராஜா இசையமைத்த வலையோசை என்ற பாடல் மிகவும் பிரபலமாகி அனைவரின் மனதையும் ஈர்த்தது. 1985-ம் ஆண்டு ஹிந்தியில் வெளிவந்த அர்ஜுன் என்ற திரைப்படம் தான் ரீமேக் செய்யப்பட்டு சத்யாவாக தமிழில் வெளிவந்தது.
இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணாவின் முதல் படம் சத்யா தான். இவர் தொடர்ந்து பாட்சா, அண்ணாமலை போன்ற வெற்றி படங்களை இயக்கினார்.
சினிமா வாழ்க்கையில் உலகநாயகன் கமலஹாசனுக்கு இப்படம் மிக முக்கியமானதாக திகழ்ந்தது. தற்போது “சத்யா” திரைப்படம் இக்காலகட்டத்திற்கு ஏற்றாற்போல இயக்குநர் விக்னேஷ் ராஜாவால் ரீமேக் செய்யப்பட போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
![](https://www.madhimugam.com/wp-content/uploads/2024/07/002-10-x-15-a.jpg)