கோலாகாலமாக நடைபெற்ற சங்கரன் கோவில் கும்பாபிஷேகம்..!! சிறப்பு கோலத்தில் காட்சி தரும் சங்கரநாராயண சுவாமி..!!
தென்னகத்தின் புகழ்பெற்ற திருத்தலமான தென்காசி மாவட்டம் சங்கரன் கோவிலில் சங்கர நாராயண சுவாமி திருக்கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற சிவாலயங்களில் ஒன்றான தென்காசி மாவட்டம் சங்கரன் கோவிலில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்ததும் பிரசித்தி பெற்ற திருத்தலமான சங்கர நாராயண சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது.
இத்திருத்தலத்தில் கடந்த 2008ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது தொடர்ந்து 16 ஆண்டுகளுக்குப் பிறகு கோவில் சீரமைக்கப்பட்டு நேற்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு கடந்த 16ம் தேதி மாலை முதல் சிறப்பு பூஜைகள் நடந்து வருகிறது. தொடர்ந்து விக்னேஸ்வர பூஜை புண்ணியாக வாசனம், சாந்தி ஹோமம், மூர்த்தி ஹோமம், நடந்தது அதனைத் தொடர்ந்து பரிவார மூர்த்திகளுக்கு அஷ்ட பந்தன மருந்து சாத்துதல் நடந்தது தொடர்ந்து யாகசாலை பூஜைகள், விக்னேஸ்வர பூஜை, புண்ணியாக வாசனம், கும்பலாகாரம், யாகசாலை பிரவேசம் நடத்தப்பட்டு முதற்கட்ட யாகசாலை பூஜை துவங்கியது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான நேற்று 6ம் கால பூஜையில் காலை 6.30 மணிக்கு மேலாக விக்னேஸ்வர பூஜை, புண்யாஹவாசனம், மஹாபூர்ணாஹூதி, தொடர்ந்து தீபாதாரணை நடத்தப்பட்டு கலச புறப்பாடு செய்து சதுர்த்தி திதி ரேவதி நட்சத்திரமும் அமிர்த யோகமும் கூடிய சுபயோக தினத்தில் காலை 9 மணிக்கு மேல் 9:45க்குள் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இவ்விழாவை காண லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதற்காக மாவட்டம் நிர்வாகம் சார்பில் பள்ளி கல்லூரிகளுக்கு அரசு அலுவலகங்களுக்கு ஒரு நாள் உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் உத்தரவிட்டுள்ளார். மேலும் இவ்விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகளும் கட்டளைதாரர்களும் செய்து வருகின்றனர் தொடர்ந்து பக்தர்களுக்கு அருள் பிரசாதங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..