“சல்லி சல்லியா நொறுக்கிட்டிங்களேடா” லியோ படத்தின் க்ளை மேக்ஸ் வெளியீடு..!! கதறும் லோகேஷ்..!!
ரோலக்ஸுக்கும் டில்லிக்கும் இடையே விக்ரம் 3ல் சண்டை நடக்கும் என பலரும் ஆவல் காட்டிய நிலையில் லியோவில் ஷாக்கிங் சப்ரைசாக ரோலக்ஸுக்கும் லியோ தாஸுக்கும் இடையே சண்டை நடக்கும் என ஒரு அப்டேட் வெளியாகியுள்ளது..
லலித் குமார் தயாரிப்பில் நடிகர் விஜய், சஞ்சய் தத், அர்ஜுன், த்ரிஷா, கௌதம் மேனன், பிரியா ஆனந்த் உட்பட பலரும் நடித்து நாளை திரையில் வெளியாக இருக்கும் நிலையில் லியோ படம் எல்.சியூ தான் என ஒரு தகவல் வெளியாகியுள்ளது..
நேற்று உதயநிதி ஸ்டாலின் படத்தை பார்த்து விட்டு தளபதி விஜய் அண்ணாவின் படம் சூப்பர்.., அனிருத் இசை, த்ரிஷா ஆக்டிங் எல்லாமே அட்டகசாம் படம் நிச்சயமாக எல்.சியூ தான் என இணையதளம் பக்கத்தில் #LCU என போட்டு உள்ளார்..
இதுவரை லியோ படம் குறித்து பல பேட்டிகள் கொடுத்துள்ள இயக்குனர் லோகேஷ் கனகராஜ் எந்த ஒரு பேட்டியிலும் லியோ படம் எல்சியூ என்பதை வெளிபடுத்தாத நிலையில் தற்போது ஒரே ஹாஸ்டாக்கில் உதயநிதி ஸ்டாலின் ஒட்டு மொத்த சஸ்பன்சையும் ஓபன் செய்து விட்டார்..
இதனால் பலரும் மீம்ஸ் போட்டு ட்ரெண்ட் செய்து வருகின்றனர்..