வெளிமாநில மது பாக்கெட்கள் விற்பனை… போலீஸ் விசாரணை
வேலூர் மாவட்டம் குடியாத்தம் காந்திநகர் பகுதியில் போலீசார் வாகன சோதனையின் போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்களை நிறுத்தி விசாரணையின் போது முன்னுக்கு பின்னாக பதில் அளித்துள்ளனர்.
அவர்கள் கொண்டு வந்த பேகை பரிசோதனை செய்துபோது அதில் கர்நாடக மாநிலத்தில் இருந்து மது பாக்கெட்கள் இருந்தது தெரிய வந்தது.
உடனடியாக அவர்களை பிடித்து விசாரணை செய்ததில் அவர்கள் குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த அண்ணாமலை மற்றும் சரண்குமார் என்பது தெரியவந்தது.
இவர் விசாரணையில் அவர்கள் கர்நாடக மாநிலத்தில் இருந்து குடியாத்தத்திற்கு மது பாக்கெட்டுகள் விற்பனைக்காக கொண்டு வந்தது தெரியவந்தது.
எனது அவர்களிடம் இருந்த 80 மது பாக்கெட்கள் பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இருசக்கர வாகனத்தில் இரண்டு இளைஞர்கள் வெளிமாநிலத்தில் இருந்து விற்பனைக்காக கொண்டு வந்த மது பாக்கெட்கள் பறிமுதல் செய்த சம்பவம் குடியாத்தம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-பவானி கார்த்திக்