பங்குனி ஆராட்டு திருவிழாவை முன்னிட்டு சபரிமலை அய்யப்பன் கோவிலில் நாளை(மார்ச்.08) நடை திறக்கபடுகிறது.
பங்குனி மாத சிறப்பு பூஜை மற்றும் 10 நாட்கள் நடைபெறும் ஆராட்டு திருவிழாவை முன்னிட்டு சபரிமலை அய்யப்பன் கோவிலில் நாளை(மார்ச்.08) மாலை 5.30 மணிக்கு தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடையை திறந்து வைக்கிறார்.
நாளை மறுநாள் (மார்ச்.09) முதல் ஆராட்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்றைய தினம் காலை 10.30 மணிக்கு ஆராட்டு திருவிழாவை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு கொடி ஏற்றி தொடங்கி வைக்கிறார்.
இதற்கிடையில், பங்குனி மாத சிறப்பு பூஜை மற்றும் 10 நாட்கள் நடைபெறும் ஆராட்டு திருவிழாவை முன்னிட்டு சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் தரிசனத்திற்க்கான ஆன்லைன் முன்பதிவு நேற்று (மார்ச்.06) தொடங்கியது.
கொரோனா வழிகாட்டு நெறிமுறையை பின்பற்றும் வகையில் தினசரி 15 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் 72 மணி நேரத்திற்கு இடைப்பட்ட காலத்தில் எடுக்கப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர். நெகட்டிவ் சான்றிதழ் அல்லது 2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ் நகல் கொண்டு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.