சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது…
சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழியும் நிலையில், இன்று மட்டும் 70 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.
மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நவம்பர் மாதம் 16- ஆம் தேதி திறக்கப்பட்டது.
மண்டல, மகர விளக்கு பூஜைகளை தொடர்ந்து, கோயிலில் தினந்தோறும் விரதமிருக்கும் ஐயப்ப பக்தர்கள், சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படும் நிலையில், தினமும் 60ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று 70 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். இதற்கிடையே, சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் வழியில் தமிழ்நாட்டை சேர்ந்த 10 வயது சிறுமி பத்மாஶ்ரீ மரணம் அடைந்தது பெரும் துயரத்தை ஏற்படுத்தியது.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.