உயரும் பலி எண்ணிக்கை..! சோகத்தில் தமிழகம்..! கைதான அந்த 4 பேர்..?
கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு உட்பட்ட கருணாபுரம் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது. அந்த கள்ளசாராயத்தை அருந்தியவர்கள் கடந்த 18ம் தேதி இரவு உடல் நலம் பாதிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து மறுநாள் காலை 100-க்கும் மேற்பட்டோர் அனுமதிக்கபட்டனர். இவர்களில் நேற்று முன்தினம் 33 – பேர் உயிரிழந்தனர். இன்னும் பலர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 28 பேர், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 15 பேர், விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 4 பேர், மற்றும் புதுச்சேரி ஜிப்மர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 3 பேர் என இதுவரை 50 பேர் உயிரிழந்து இருப்பதாக தகவல்கள் வெளியானது..
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் 66 பேரும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 16 பேரும், சேலம் அரசு மருத்துவமனையில் 31 பேரும், விழுப்புரம் முண்டியம் பாக்கம் அரசு தலைமை மருத்துவமனையில் 2 பேர் என மொத்தம் 115 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து காவல்துறையினர் மேற்கொண்ட சோதனையில் கண்ணுக்குட்டி, விஜய், தாமோதரன் ஆகிய மூன்று பேரை கைது செய்து 328, 304 (2), 41 I, 41 A ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜூலை 5-ஆம் தேதி வரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி ஸ்ரீராம் உத்தரவிட்டுள்ளார்.
50 பேர் மரணத்திற்கு காரணமான கள்ளச்சாராய விற்பனை விவகாரத்தில் முக்கிய குற்றவாளியான சின்னதுரை கைது செய்யப்பட்டனர். மேலும் கடலூரில் பதுங்கியிருந்த சின்னதுரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
– லோகேஸ்வரி.வெ