புரட்சியாளர் அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். சமத்துவ போராட்டத்தில் வடக்கு கண்ட பெரியார் என்று அவரை நினைவு கூர்ந்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
இன்று நாடு முழுவதும் பாரத ரத்னா புரட்ச்சியாளர் அண்ணல் அம்பேத்கரின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. ஜாதி மத பேதங்களை தாண்டி இந்தியாவிற்காக அனைவர்க்குமான ஒரே அரசியல் சாசனத்தை எழுதிய மஹான் அவர்க்கு இன்று 66வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அம்பேத்கரின் புகைப்படம் மற்றும் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி இந்தியா தேசிய தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
ஒடுக்கப்பட்ட மக்களின் அடிமை விலங்கை ஒடிக்க புரட்சி செய்த புத்துலக புத்தர்; சமத்துவத்தை நோக்கிய போராட்டப் பயணத்தில் வடக்கு கண்ட பெரியார்; புரட்சியாளர் #BabaSahebAmbedkar-இன் நினைவுநாளில் ஆதிக்கமற்ற சமுதாயத்தை அமைத்தே தீருவோம் எனச் சூளுரைத்து உறுதியெடுப்போம்! pic.twitter.com/aGQtpsV6G1
— M.K.Stalin (@mkstalin) December 6, 2022
இந்நிலையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அம்பேத்கர் நினைவு தினத்தில் அவரை நினைவு கூறும் வகையில் ட்வீட் செய்துள்ளார். அதில், ஒடுக்கப்பட்ட மக்களின் அடிமை விலங்கை ஒடிக்க புரட்சி செய்த புத்துலக புத்தர், சமத்துவத்தை நோக்கிய போராட்டப் பயணத்தில் வடக்கு கண்ட பெரியார் புரட்சியாளர் பாபா சாஹிப் அம்பேத்கரின் நினைவுநாளில் ஆதிக்கமற்ற சமுதாயத்தை அமைத்தே தீருவோம் எனச் சூளுரைத்து உறுதியெடுப்போம். என்று முதல்வர் பதிவிட்டுள்ளார்.