வங்ககடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகம் மற்றும் புதுவையில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்தியா வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதை ஒட்டிய தெற்கு அந்தமான் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளது பிறகு மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று மாலைகாற்றழுத்த தாழ்வு மணடலமாக உருவாகி தமிழகம் மற்றும் புதுவையில் கனமழை பெய்ய கூடும் என்று தெரிவித்துள்ளது.
மேலும் புயலாக வலுப்பெற்று வடதமிழகம் மற்றும் புதுவை பகுதிகளில் டிசம்பர் 8ம் தேதி முதல் மிக கனமழை பெய்யும் என்றும் 9ம் தேதி உள்தமிழ்நாடு பகுதிகளிலும் மிக கனமழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் டிசம்பர் 10ம் தேதி தமிகத்தில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் அறிவித்துள்ளது. 10ம் தேதி முதல் தெற்கு ஆந்திர பகுதிகளில் மழை பொலிய வாய்ப்புள்ளதாகவும் இந்தியா வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புயலின் தீவிரம் அதிகமாக இருக்கும் காரணத்தினால் மீனவர்களுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. புதிதாக உருவாகியுள்ள புயலின் காரணமாக இந்தியா வானிலை ஆய்வு மையம் தமிழ்நாட்டிற்கு ஆரஞ்ச் அலெர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.