ADVERTISEMENT
திமுக தேர்தல் அறிக்கை வெளியானது..!! “பெட்ரோல் விலை ரூ.75”
திமுக தேர்தல் அறிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் எம்பி கனிமொழி வழங்கினார்.
அதை தொடர்ந்து திமுக தேர்தல் அறிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.
* மாநில உண்மையான சுயாட்சி பெறும் வகையில் இந்திய அரசியல் ஆமைப்பு திருத்தப்படும்
* ஆளுநர் பதவியில் தேவையில்லாதது என்றாலும் இருக்கும் வரை முதல்வரின் ஆலோசனை பெற்று நியமிக்கப்பட வேண்டும்
* ஆளுநருக்கு அதிகாரம் வழங்கும் பிரிவு 361 நீக்கப்படும்
* உச்ச நீதிமன்ற கிளை சென்னையில் அமைக்கப்படும்
* புதுவைக்கு மாநில அந்தஸ்து
* மத்திய அரசு பணிக்கு தமிழ் மொழியில் தேர்வு நடைபெறும்.
* அனைத்து மாநில வளர்ச்சிக்கும் சம அளவு நிதி திருக்குறள் தேசிய நூலாக அறிவிக்கபப்டும்.
* தாயகம் திரும்பிய இலங்கை தமிழருக்கு இந்திய குடியுரிமை அளிக்கப்படும்.
* ரயில்வேக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.
* புதிய கல்விக்கொள்கை ரத்து செய்யப்படும்.
* நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான இட ஒதுக்கிடு உடனடியாக அமல்
* நாடு முழுவதும் அரசுப்பள்ளிகளில் காலை உணவு
* இந்தியா முழுக்க மகளிருக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் அளிக்கப்படும்
* தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு
* எல்.பிஜி சிலிண்டர் விலை ரூ.500
* பெட்ரோல் விலை ரூ.75
* டீசல் விலை ரூ.65ஆக குறைக்கப்படும்.
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
