திமுகவின் “தேர்தல் அறிக்கை” இன்று வெளியீடு..!!
திமுகவின் அதிரடியான 15 தேர்தல் அறிக்கை வாக்குறுதிகள் பெரும் பரபரப்பையும் மற்றும் வாக்காளர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தையும் ஏற்படுத்தக் கூடியதாகவும் இருந்து வருவது வழக்கம்.
திமுகவின் அதிரடியான 2019-ன் 15 தேர்தல் அறிக்கை வாக்குறுதிகள்…
1. தமிழ்நாட்டில் இயங்கும் மத்திய அரசு அலுவலகங்களில் தமிழ் மொழியை இணை ஆட்சி மொழியாக அறிவிக்க சட்டத்திருத்தங்கள் செய்யப்படும்.
2. வேளாண் துறைக்கு தனியாக நிதிநிலை அறிக்கை
3. மத்திய அரசின் வரி வருவாயில் 60% மாநில அரசுக்கு பகிர்ந்து அளிக்க வேண்டும்.
4. மத்திய நிதிக்குழுவின் அமைப்பும் பணிகளும் மாநிலங்களிடையேயான மன்றங்களால் வரையறுக்கப்பட வேண்டும்.
5. மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டமே செயல்படுத்தப்படும்.
6. தொழிலாளர் ஊதிய திட்டத்தின் குறைந்தபட்ச தொகையாக ரூ,8,000.
7. மதுரை, திருச்சி, கோவை, சேலத்தில் மெட்ரோ ரயில் திட்டம்
8. மத்திய மாநில அரசில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படும்
9. சேது சமுத்திர திட்டம் மீண்டும் துவங்க நடவடிக்கை.
10. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்ய நடவடிக்கை
11. நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை; மாணவர்களின் கல்விக்கடன்களை ரத்துச் செய்ய நடவடிக்கை
12. கிராம பெண்களுக்கு தொழில் தொடங்க வட்டியில்லாமல் ரூ50,000 கடன்.
13. இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை
14. தேசிய நெடுஞ்சாலைக பராமரிப்பில்1 கோடி சாலை பணியாளர்கள் நியமனம்
15. தனியார் நிறுவனங்களிலும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.