தமிழ்நாடு அரசு விரைவு பேருந்தில் பெண்களுக்கான இடஒதுக்கீடு அமலுக்கு வந்தது..!
தமிழ்நாடு அரசு விரைவு பேருந்தில் இருக்கைகள், படுக்கை வசதிகள், குளிர்சாதன வசதி, மற்றும் கழிப்பறை வசதி கொண்ட 1078 பேருந்துகள் இயங்கி வருகின்றனர். அதிலும் 251 பேருந்துகள் 300கிமீ தூரத்திற்கு மேல் செல்லும் ஊர்களுக்காக இயக்கப்பட்டு வருகிறது .
ஆனால் அதில் பெண்கள் முன்பதிவு செய்தால் இரு இருக்கைகள் மட்டுமே முன்பதிவு செய்துக்கொள்ளும் படி, இருந்தது அதை 4 ஆக உயர்த்த படும் என போக்குவரத்து துறை மானிய கோரிக்கையில் அமைச்சர் சிவசங்கர் அறிவித்திருந்தார்.
அந்த கோரிக்கை மனுவை ஏற்ற தமிழக அரசு, நான்கு இருக்கைகளை ஒதுக்கீடு செய்யும் முறையை அமலுக்கு கொண்டு வந்தது. பெண்களின் இருக்கைகள் மஞ்சள் நிறத்தில் இருக்கும்.
அவர்கள் முன்பதிவு செய்துவிட்டால் இருக்கைகள் சிவப்பு நிறத்திற்கு மாறிவிடும் எனவும். பெண்கள் யாரும் முன் பதிவு செய்யவில்லை என்றால் தான் அது மற்றவர்களுக்கு ஒதுக்கி தரப்படும் . எனவும் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
வெ.லோகேஸ்வரி
Discussion about this post