ஒரு கோடி பனைவிதைகள் கொடுக்கும் சபாநாயக்கர் அப்பரவு அறிக்கை..!!
ஒரு கோடி பனை விதைகள் நடும் நெடும் பணிக்கு தமிழ்நாடு சபாநாயகர் அப்பாவு ஒரு இலட்சம் பனை விதைகள் அளிப்பதாக உறுதி
தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நல வாரியம், கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு, நாட்டு நலப்பணி திட்டம் இணைந்து முன்னெடுக்கும் ஒரு கோடி பனை விதைகள் நடும் நெடும் பணி நாட்டுநலப்பணித்திட்ட நாளான செப்டம்பர் மாதம் 24-ந் தேதி தமிழக கடலோரங்களில் 1076 கிலோ மீட்டர் தொலைவிற்கு நடைபெறுகிறது.
இப்பணிக்கு திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டிணம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் பனை விதைகள் சேகரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
நேற்று சென்னை தலைமை செயலகத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை தலைவர் மு.அப்பாவுவை சந்தித்து ஒரு கோடி பனை விதைகள் நடும் நெடும் பணியின் விளக்கக் கையேட்டினை முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு பனை மரத் தொழிலாளர்கள் நல வாரியத் தலைவருமான எர்ணாவூர் ஆ.நாராயணன் வழங்கினார்.
சபாநாயகர் அப்பாவு கூறுகையில், ஆண்டுதோறும் ஒரு இலட்சம் பனை விதைகளை வழங்கி வருகிறேன். இந்தாண்டு
ஒரு கோடி பனை விதைகள் நடும் நெடும் பணிக்கு ஒரு லட்சம் பனை விதைகளை வழங்குகிறேன் என்றார். இந்நிகழ்வில் கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மு.ராஜவேலு, இணை ஒருங்கிணைப்பாளர் சி.செந்தில்குமார் தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நல வாரிய வழக்கறிஞர் கண்ணன், அலுவலர் ஜெபராஜ் டேவிட் ஆகியோர் உடன் இருந்தனர்.
Discussion about this post