கடந்த சில மாதங்களாகவே அதிமுகவினரும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையும் தங்களை மாறி மாறி விமர்சித்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன் பத்திரிக்கையாளரை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அரசியல் விஞ்ஞானிகளுக்கு பதில் சொல்ல மாட்டேன் என செல்லூர் ராஜூவை விமர்சித்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கட்சியில் சேர்ந்து ஓராண்டிலேயே தலைவரான அண்ணாமலை அரசியலில் கத்துக்குட்டி என்பது எல்லாருக்கும் தெரியும். அதிமுகவினர் மீது துரும்பை எறிந்தால் கூட பதிலுக்கு இரும்பை வீசுவோம் என அண்ணாமலைக்கு செல்லூர் ராஜூ எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Discussion about this post