மதமும் சாதியும் மனிதனை வெறுக்க வைக்கும்..!! நடிகர் அஜித் சொன்ன வார்த்தை..!!
மதமும் சாதியும் நீங்கள் இதுவரை சந்திக்காத மனிதர்களை கூட வெறுக்க வைக்கிறது’ என்று ஒரு கூற்று உண்டு. அது ரொம்பவே உண்மை.. பயணம் மேற்கொள்ளும் போது தான் பலவித அனுபவங்கள் கிடைக்கும். பயணத்தின் மூலம் தேசம், மதம், கலாச்சாரம் கடந்து பலதரப்பட்ட மனிதர்களை உணர முடியும் என்று நடிகர் அஜித் குமார் பேசிய பழைய வீடியோ இப்போது வெளியாகி வைரல் ஆகி வருகிறது.
தனது வீனஸ் நிறுவனத்திற்காக ஏப்ரல் மாதம் பேசிய வீடியோ இப்போது வேகமாக பரவி வருகிறது. பலருக்கு பயணம் என்பது மிகவும் படித்த ஒன்று. வாழ்க்கையே பயணம் தான் என்றாலும், பிடித்த இடங்கள், இதுவரை சந்திக்காத மனிதர்கள், வித்தியாசமான கலாச்சாரங்கள் என பல விஷயங்களை பயணத்தின் மூலம் பார்க்க முடியும்.
2கே கிட்ஸ் பலர், மதுரையில் இருந்து திருச்சிக்கோ, திருச்சியில் இருந்து கோவைக்கோ இருசக்கர வாகனத்தில் செல்வது சர்வ சாதாரணமாகிவிட்டது. உட்கார்ந்த இடத்திலேயே வேலை எப்போது ஆரம்பித்ததோ, அப்போதே பலருக்கும் மன அழுத்தமும் அதிகமானது. அதனை குறைக்க பயணத்தின் மீது பலர் ஆர்வம் காட்டுகிறார்கள்.
இன்றைக்கு பல பேர் லடாக்கிற்கு சர்வ சாதாரணமாக சென்று வருகிறார்கள். சென்னை – கொல்கத்தா, சென்னை – கோவா, திருவனந்தபுரம் – மும்பை, காஷ்மீர் – கன்னியாகுமரி, மேகலாயா, சிக்கிம் என பிடித்த இடங்களுக்கு எல்லாம் இரு சக்கர வாகனத்திலேயே பலரும் சுற்றுலா செல்ல தொடங்கிவிட்டார்கள்.
பொதுவாக இரு சக்கர வாகனத்தில் தொலைதூர பயணங்கள் மேற்கொள்வதில் அதிக ஆர்வம் உள்ளவர் நடிகர் அஜித் குமார். இப்படி சுற்றுலா செல்பவர்களுக்காக புதிய நிறுவனம் தொடங்கலாமே என்று யோசித்தவர் அதற்கான அறிவிப்பினை கடந்த ஆண்டு வெளியிட்டார்.
தொலைதூரங்கள் இரு சக்கர வாகனத்தில் சுற்றுலா சென்று வருவோருக்கு பாதுகாப்பான பயணம் மற்றும் அறியப்படாத இடங்களை காட்டுவது போன்ற சேவைகளை செய்ய நிறுவனம் ஒன்றை ஆரம்பித்திருக்கிறார்.
“வீனஸ் மோட்டார் சைக்கிள் டூர்ஸ்” என்ற பெயரில் அஜித்தின் சுற்றுலா நிறுவனம் இயங்கி வருகிறது. மேலும் பைக் மட்டுமல்ல காரிலும் சுற்றுலா செல்ல வீனஸ் சுற்றுலா நிறுவனத்தை அணுகலாம் என்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது.
நாடு முழுவதும் சூப்பர் பைக்கில் மற்றும் கார்களில் நாட்டின் முக்கியமான சுற்றுலா தளங்களை பார்வையிட இனி அஜித் குமாரின் ‘வீனஸ் மோட்டார் சைக்கிள் டூர்ஸ்’ நிறுவனத்தை அணுகலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும், பல்வேறு அறியப்படாத இடங்கள் இருக்கின்றன. அவற்றை பார்க்க விரும்புபவர்களுக்கு பாதுகாப்பான பயணத்தை அஜித்தின் வீனஸ் நிறுவனம் ஏற்பாடு செய்து கொடுப்பதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் நடிகர் அஜித் குமார் வீனஸ் டூர்ஸ் நிறுவனத்திற்காக கடந்த ஏப்ரல் மாதம் பேசிய பழைய வீடியோ இப்போது வெளியாகி வைரல் ஆகி வருகிறது. அந்த வீடியோவில் அஜித் கூறுகையில், “மதமும் சாதியும் நீங்கள் இதுவரை சந்திக்காத மனிதர்களை கூட வெறுக்க வைக்கிறது’ என்று ஒரு கூற்று உண்டு.
அது ரொம்பவே உண்மை. மக்களை பார்க்காமலேயேக் கூட அவர்களை நாம் இப்படித்தான் என மதிப்பிட கூடும். நான் பயணித்தின்போது, பல நாட்டைச் சேர்ந்தவர்கள், பல்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள், அவர்களின் கலாச்சாரம் குறித்து அனுபவித்திருக்கிறேன். அதனால், நீங்கள் மக்களைப் புரிந்து கொள்ள முடியும்.
பயணத்தினால், உங்களைச் சுற்றியுள்ள மக்களை புரிந்து கொள்ள தொடங்குவீர்கள். அது உங்களை மேம்பட்ட மனிதராக்கும்” இவ்வாறு பேசியுள்ளார்.
– கவிப்பிரியா
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..