ஆதரவற்றவர்களுக்கு உறவாக மாறிய உறவுகள்.. ஊரும் உறவும்..31
சென்னையை சேர்ந்த படித்த இளைஞர்கள் சுயமாக தொழில் செய்து வருகின்றனர். வருகின்ற லாபத்தின் ஒரு பகுதியை எடுத்து இல்லாத ஏழைகளுக்கும் ஆதரவற்றோருக்கு கொடுப்பது வழக்கம். இந்த உதவும் உள்ளங்கள் பற்றி நம் மதிமுகத்திற்கு தெரிய வர.., அதில் ஒருவரான காலித்திடம் சென்று இது பற்றி கேட்டோம்.
அப்போது, தெருவோரங்களில் இருக்கும் மக்களிடம் நாங்கள் ஒருமுறை சந்தித்து பேசிய போது, நாங்கள் எப்படியெல்லாமோ வாழ்ந்தவர்கள்.., ஆனால் இன்று ஒரு வேலை சாப்பாட்டிற்கு கூட மற்றவரிடம் கையேந்தும் நிலைமை வந்துவிட்டது. நாங்கள் இறந்தால் கூட எங்களை கார்ப்ரேஷன் குப்பை லாரியோ அல்லது தெருவோர நாயோ தான் கூட்டி கொண்டு செல்லும் எங்களின் நிலைமை இது தான் என சொல்லிக்கொண்டே கண்ணீர் வடிக்க ஆரமித்தார்.
அப்போது நான், அந்த அம்மாவின் கையை பிடித்து நீங்கள் எதற்கும் கவலை வேண்டாம் நான் இருக்கிறேன் என காலித் சொல்லியுள்ளார், ஒரு அம்மாவின் கண்ணீருக்கு பின்னால் இத்தனை வேதனைகள் இருந்தால் தெருவோரம் எத்தனை பேர் வாழ்கிறார்கள் அவர்களின் நிலைமையும் இப்படி தானே இருக்கும் என நினைத்த காலித், தனது நண்பர்களுடன் சேர்ந்து 2017ம் ஆண்டு “உறவுகள்” என்ற அமைப்பை துவக்கினார்.
அன்று முதல் இன்று வரை சென்னையின் பல இடங்களில் உள்ள தெருவோர மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை இந்த அமைப்பினர் செய்து வருகின்றனர். உங்களின் பகுதியிலோ அல்லது உங்களை சார்ந்தவர்களுக்கோ உதவி தேவை பட்டால் இந்த எண்ணை அழைக்கலாம்., “9087087063”..,
அனைவருக்கும் உதவும் இந்த நண்பரின் செயலை பாராட்டி மதிமுகம் சார்பாக வாழ்த்துக்களை சொல்லுவோம்..,
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..