“திராவிட மாடலுக்கான அங்கீகாரம்” சமூக நீதியை நிலைநாட்டும் தீர்ப்பு..! முதலமைச்சர் ஸ்டாலின் வைகோ வரவேற்பு..!
ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக விடுதலைக்கான சமூக நீதியை நிலைநாட்டும் தீர்ப்பு என உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோர் வரவேற்றுள்ளனர்.
இதுகுறித்து முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக விடுதலைக்கான சமூக நீதியை நிலைநாட்டும் நமது திராவிட மாடல் பயணத்துக்கான மற்றுமோர் அங்கீகாரமாக இன்றைய உச்சநீதிமன்றத் தீர்ப்பு அமைந்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
முறையாகக் குழு அமைத்து அதன்மூலம் திரட்டப்பட்ட தரவுகளை அடிப்படையாகக் கொண்டு அருந்ததியர் சமுதாயத்திற்கான 3% உள்ஒதுக்கீட்டைத் கலைஞர் கொடுக்க – அதற்கான சட்ட முன்வடிவைப் பேரவையில் தான் அறிமுகம் செய்து நிறைவேற்றித் தந்ததையும் நினைவு கூர்ந்துள்ளார்.
இந்தச் சட்டத்தை உச்சநீதிமன்றத்தின் ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வு உறுதிசெய்திருப்பது பெருமகிழ்ச்சி அளிப்பதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். இதேபோல், பட்டியல் இனத்தவர் இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு செல்லும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு மதிமுக பொதுச்செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வரவேற்பு அளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பட்டியலின, பழங்குடியினர் உள் ஒதுக்கீடுதர மாநில அரசுகளுக்கு அதிகாரம் எனவும் தடை இல்லை என்ற தீர்ப்பு வரவேற்கத்தக்கது.. என்றும் உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு, வரலாற்று சிறப்புள்ள தீர்ப்பை வழங்கியது சமத்துவத்துக்கு வழி வகுக்கும் என்றும் வைகோ குறிப்பிட்டுள்ளார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..