மழை பாதிப்புகள் எதிர்கொள்ள தயார்…!! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு…!!
மழையால் எவ்வளவு பெரிய பாதிப்புகள் வந்தாலும் அதை எதிர்கொள்ள அரசு தயார் நிலையில் உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தென்மாவட்டங்களின் பல்வேறு இடங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், சென்னை எழிலகத்தில் உள்ள அவசரகால செயல்பாட்டு மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு நடத்தினார். முன்னதாக மழை நிலவரம், பாதிப்புகள், அணை நீர் திறப்பு உள்ளிட்ட விவரங்களை கேட்டறிந்தார். அதன் பின்னர் மழை பாதித்த பகுதிகளில் உடனடியாக பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் மழையால் எவ்வளவு பெரிய பாதிப்புகள் வந்தாலும் அதை எதிர்கொள்ள அரசு தயார் நிலையில் உள்ளது என்றும் மழை பாதிப்பால் இதுவரையில் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் மத்திய அரசு வழங்கிய பேரிடர் நிதி போதுமானதாக இல்லை என்றும், ஒரே நாடு ஒரே தேர்தல்” மசோதாவை, ஒன்று சேர்ந்து எதிர்ப்போம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..