”ரஜினி சொன்ன வார்த்தை தான் இன்றைக்கும்”.. நடிகர் சரவணன் பேட்டி..!
வைதேகி வந்தாச்சி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் அறிமுகமானவர் நடிகர் சரவணன். அதன்பிறகு பொண்டாட்டி ராஜியம், அபிராமி, மாமியார் வீடு போன்ற பல ஷிட் படங்களில் நடித்த இவர் 90களின் காலக்கட்டத்தில் முன்னனி நடிகராக வலம் வந்தார்.
பின்னர் சினிமாவை விட்டு விலகி இருந்த இவர் கார்த்தியின் பருத்திவிரன் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் ரீ என்ரி கொடுத்தார். அந்த படம் அவருக்கு மிக பெரிய பெயரை பெற்று தந்தது. அதிலும் அவர் ஏற்ற நடித்திருந்த சித்தப்பு கதாபாத்திரம் பலரது பாரட்டையும் பெற்றது. இந்தநிலையில் இவர் நடிகர் ரஜினிகாந்த் குறித்து பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
அந்த பேட்டியில் தான் மிக பெரிய ரஜினி ரசிகர் என்றும் ஆரம்பத்தில் எங்கள் ஊரில் நான் அவருக்காக ரசிகர் மன்றம் வைத்திருந்தேன். சூரமங்கலம் ரஜினி மன்றத்தின் கவுரவ ஆலோசகராக இருந்த நான் எட்டு வருடங்கள் மன்றத்தின் சார்பாக நான் ரத்தம் கொடுத்து இருக்கிறேன்.
மேலும் பருத்திவீரன் திரைப்படம் ரிலீஸ் ஆனபோது ரஜினி எனக்கு போன் செய்தது மறக்க முடியாது என்று கூறியுள்ளார். அதாவது பருத்திவீரன் திரைப்படத்தில் நடித்த பிறகு ரஜினியின் அழைப்புகாக காத்திருந்தேன். அதேபோலவே ரஜினியும் எனக்கு போன் பண்ணினார். அப்போது பேசிய அவர் ”இந்த படத்தில் 13 இடத்தில் நீங்கள் கைதட்டு வாங்குவீர்கள் என்று சொன்னார்.
இவ்வளவு பெரிய மனுஷன் இவ்வளவு உன்னிப்பாக கவனிச்சிருக்கிறாரே என்று நினைத்து மிகவும் சந்தோஷபட்டேன்.. அதேபோல இந்த படத்துக்கு பிறகு சித்தப்புன்னுதான் உங்களை பலர் கூப்பிடுவாங்க என்று சொன்னார். அவர் கூறியது போலவே பலரும் என்னை இன்றைக்கும் அப்படி தான் கூறுகின்றனர் என்று அந்த பேட்டியில் கூறியுள்ளார்.