வேட்டையன் கொலு வைத்து கொண்டாடிய ரஜினி ரசிகர்…!! கண்காட்சி போல மாறிய திருமங்கலம்…!!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை வாழும் தெய்வமாக வழிபட்டு கோவில் கட்டி “வேட்டையன் கொலு” வைத்து கொண்டாடும் மதுரை திருமங்கலம் குடும்பம்
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள கார்த்திக் குடும்பமே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை வாழும் தெய்வமாக கொண்டாடி வருகிறது. அது மட்டுமல்ல ரஜினிகாந்த்துக்கு அழகிய பல வண்ணம் தீட்டப்பட்ட சிலையையும் முன்னாள் ராணுவ வீரர் கார்த்திக் கடந்த ஆண்டு அமைத்து ஒரு தனியறையில் தினமும் அவரது நீண்ட ஆயுளுக்கும் ஆரோக்கியத்திற்கும் பிரார்த்தனை செய்து வருகிறார்.
ஆவர் மட்டுமல்ல அவரது குடும்பத்தினர் அனைவருமே இந்த ரஜினி கோவிலை அழகுற அமைப்பதிலும் முன்னாள் ராணுவ வீரர் கார்த்திற்கு முழு ஆதரவு அளிப்பதுடன் அந்த ரஜினி கோவிலை பராமரிப்பதிலும் அவருக்கு தினமும் உதவி வருகிறார்கள்.
ரஜினி காந்த் கோவிலை கடந்த ஆண்டுதான் அவரது ரசிகரான முன்னாள் ராணுவ வீரர் கார்த்திக் கட்டியுள்ளார். தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியாவிலேயே ரஜினிக்கு கோவில் கட்டிய ஒரே தீவிர ரசிகர் என்ற பெருமை அவருக்கு உண்டு என்று சொல்லலாம்.
ரஜினியின் எளிமை, அவர் சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் தனது குடும்பத்தின் மீது அவர் வைத்திருக்கும் மரியாதை, குறிப்பாக அவரது அண்ணன் சத்ய நாராயணா மீது இருக்கும் அளவு கடந்த பாசம,; அவரது வெளிப்படையான பேச்சு ஆகியவை தன்னை வெகுவாக கவர்ந்தது என்று ரஜினி ரசிகர் கார்த்திக் உணர்ச்சி பெருக்குடன் கூறுகிறார்.
ரஜினி நடித்த அபூர்வ ராகங்கள் முதல் கூலி படம் வரையிலான ஸ்டில்கள், ஸ்டிக்கர்கள், பேனர்கள் ஆகியவற்றைக் கொண்டு அழகான நவராத்திரிக் கொலுவை தற்போது அவர் அமைத்துள்ளார். இதில் சூப்பர் ஸ்டார் நடித்த 171 படங்களின் ஸ்டில்கள், கட் அவுட்டுகள் அழகாக கொலுப் படிகளில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன.
இது காண்பரை நிச்சயம் ஈர்க்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இந்த ரஜினி கோவிலை சூப்பர் ஸ்டார் வளர்ந்த பெங்களுரு, கன்னியா குமரி, மற்றும் பல்வேறு தமிழக பகுதிகளில் இருந்தும் வந்து பார்த்து ரஜினி ரசிகர் கார்த்திக்கை வியந்து பாராட்டி வருகிறார்கள்.
ரஜினி காந்த் நீண்ட காலம் ஆரோக்கியத்துடன், நலமாக வாழ வேண்டும்.
விவசாயம் செழிக்க வேண்டும். எம் மதத்தினரும் நமது சகோதரர்களே என்ற நோக்கத்தை மையமாகக் கொண்டு இந்த கொலுவையை வைத்திருப்பதாக கார்த்திக் தெரிவித்தார். ரஜினி காந்த் சிலைக்கு எதிரே ஒரு பெரிய கழுகு சிலையும் உள்ளது. புறவைகளின் அரசன் கழுகு. அது மழை பெய்யும் போது மழையில் நனையாமல் இருக்க எந்த மரத்தின் பகுதிகளிலும் ஒதுங்குவது இல்லை.
அது மழை மேகத்திற்கு மேலே பறந்து மழையில் நனையாமல் கம்பீரமாக வானில் வலம் வரும். அதேப் போல தலைவர் ரஜினி காந்த் என்றைக்கும் திரைவானில் சூப்பர் ஸ்டாராக திகழ்வதை அடையாளப்படுத்தவே இந்த கழுகு சிலையை அமைத்துள்ளேன் என்றும் கார்த்திக் குறிப்பிட்டார்.
இந்த கொலு அலங்காரத்தில் படையப்பாவில் நடித்த ரஜினி காந்த் கதா பாத்திர களி மண் சிலையும், சிவாஜியில் அவரது கதாபாத்திரம் வெள்ளை சிமென்ட் சிலையாகவும் உருவாக்கப்பட்டு இடம் பெற்றிருக்கின்றன.
இந்த கொலு அலங்காரத்திற்கு 45 நாட்கள் ஆகியுள்ளது. தலைவருக்காக எத்தனை நாட்களும் இதே போன்ற பணிகளை செய்யலாம் என பெருமிதத்துடன் அவர் கூறியபோது அந்த கோவிலை பார்க்க வந்த அத்தனை பேர் முகங்களும் ஆச்சரியப்பட வைத்தது.. தற்போது இந்த வேட்டையன் கொலுவை பலரும் பார்வையிட்டு செல்கின்றனர்… இந்த கோவிலை வைத்துள்ள கார்த்திக் முன்னாள் ராணுவ வீரர் என்பது குறிப்பிட தக்கது..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..