தண்டைவாளத்தில் தேங்கும் மழை நீர்..! ஆவடியில் ரயில்கள் நிறுத்தி வைப்பு..!!
நேற்று இரவு முதல் பெய்த கனமழையால் சென்னை பேஷன் பிரிட்ஜில் தண்டவாளத்தில் மழைநீர் தேங்கியுள்ளது. எனவே பெங்களூரில் இருந்து சென்னை சென்ட்ரல் வர வேண்டிய சதாப்தி விரைவு எக்ஸ்பிரெஸ், ஆவடி இரயில் நிலையத்தில் ஒன்றரை மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்த சதாப்தி விரைவு வண்டியில் சுமார் 1000 பயணிகள் பயணித்திருந்த நிலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்துள்ளனர். கால தாமதமாகி கொண்டிருந்ததால் ஒரு சில பயணிகள் பேருந்து, கார் என பிற வாகனங்களில் சென்றுள்ளனர்.

தண்ணீரை வெளியேற்றிய பின்னரே ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன.., காலை 6 மணிக்கு சென்ட்ரல் வந்து சேர வேண்டிய இரயில், காலை 11 மணிக்கு வந்து சேர்ந்துள்ளது. 1000 பேர் பயணித்த சதாப்தி விரைவு எக்ஸ்பிரஸில் வெறும் 200 பயணிகள் மட்டுமே சென்னை சென்ட்ரல் வந்தடைந்தனர்.
ஆனால் சென்னை சென்ட்ரலில் ரயில் நின்று கொண்டிருந்த அதே சமையம் வந்தே பாரத் விரைவு இரயில், சென்னை சென்ட்ரலை நோக்கி சென்றுள்ளது..
Discussion about this post