ரயிலுக்குள் மழை..! பயணிகளே உஷார்..!!
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருச்சி, மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், குழித்துறை வழியாக திருவனந்தபுரத்துக்கு அனந்தபுரி தினசரி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
நேற்று இரவு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து அனந்தபுரி நோக்கி சென்ற அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயிலில் நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானோர் பயணம் செய்தனர். தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் நேற்று பெய்த கனமழையால் பல இடங்களில் தண்ணீர் தேங்கியது.
இந்நிலையில் செங்கல்பட்டு பகுதியில் இருந்து அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டிருந்தது. இரவு என்பதால் பயணிகள் தூங்கி விட்டனர். மறுநாள் காலை ஏசி முதல்வகுப்பு ‘ஏ2’ பெட்டியில் திடீரென மேலே இருந்து மழைநீர் கொட்டியது. இதை பார்த்து பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இருப்பினும் மழைநீரை அகற்றி விட்டு தங்கள் பயணத்தை தொடர்ந்தனர்.
பின் சிறிது நேரம் கழித்து அதிகளவு தண்ணீர் கொட்டியதால். பயணிகள் கடுப்பாகியுள்ளனர். தூக்கம் தொலைந்த நிலையில், மழைநீரால் பயணிகள் மிகுந்த சிரமம் மற்றும் அசவுகரியத்துக்கு உள்ளாயினர். பின் டிக்கெட் பரிசோதகரிடம் சென்று முறையிட்டதோடு, வாக்குவாதத்திலும் ஈடுபட்டுள்ளனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..