நகைச்சுவை வசனங்களுக்கு வாயசைப்பது, நகைச்சுவை வீடியோக்களை பதிவுசெய்து சிரிக்க வைப்பது எனப் பிரபலமடைந்த காமெடி யூடியூபர் ராகுல் டிக்கி, சாலை விபத்தில் கடந்த ஜனவரி 16-ஆம் தேதி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இவருக்கு 27 வயதாகிறது. ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் பகுதியைச் சார்ந்தவர். தந்தை இறந்து விட்ட நிலையில் தாயை ராகுல்தான் கவனித்து வந்தார். இந்த நிலையில், பைக்கில் சென்ற ராகுல் விபத்தில் சிக்கி இறந்து போனார். இது அவரது மனைவி 21 வயதே நிரம்பிய தேவிகாஸ்ரீயை கடும் வேதனைக்குள்ளாக்கியது. கணவரை இழந்த துக்கத்தில் இருந்தவ தேவிகா இப்போது, கொஞ்சம் கொஞ்சமாக அதில் இருந்து மீண்டு வர தொடங்கியுள்ளார்.
மேலும் தனது கணவரின் இன்ஸ்டா பக்கத்தில் இருந்து மீண்டும் வீடியோக்களை தேவிகா வெளியிட தொடங்கியிருக்கிறார். இந்த நிலையில், பிரபல பத்திரிகைக்கு தேவிகா ஸ்ரீ அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது, ‘ராகுல் உயிரோட இல்லனாலும் என்னை வழி நடத்திட்டுதான் இருக்கிறாரு. அவருடைய பாலோயர்ஸ் 10 லட்சம் பேரும் என்னை அப்படியே ஏத்துக்கிட்டு அன்பை பொழியுறாங்க.
இப்போ மேலும் 2 லட்சம் பேர் என்னை பின் தொடருறாங்க. அப்பா இல்லாத அந்த குறையை ராகுல்தான் தீர்த்து வச்சான். என்னை பெண் பார்த்து, அவங்க அம்மாதான் கல்யாணம் கட்டி வச்சாங்க. ஆனால், இப்போ என் மாமியாரே என்னை வெறுக்குறாங்க. அவங்க மாறுவாங்கனு நம்புறேன். இப்போது, என்னோட வீடியோக்களை பாக்குறவங்க ராகுலை பார்க்குற மாதிரியே இருக்குதுனு சொல்றாங்க. அதுதான் எனக்கு ரொம்ப சந்தோஷத்தை தருது.’
இவ்வாறு அவர் பேசியுள்ளார்.