சீறி பாயும் காளைகள்..!! களைகட்டிய ஜல்லிக்கட்டு..!! 13 காளைகள் தகுதி நீக்கம்…?
மதுரை, அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 13 காளைகள் தகுதி நீக்கம் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு 10 பேர் காயம் அடைந்துள்ளனர்.
மதுரை அவனியாபுரத்தில் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு இன்று தொடங்கியது. ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் 1,100 காளைகளுக்கும், 900 வீரர்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வெற்றி பெறும் சிறந்த காளைக்கு டிராக்டரும், வீரருக்கு காரும் பரிசாக வழங்கப்பட உள்ளது.
இன்று ஜல்லிக்கட்டு நடைபெறும் அவனியாபுரத்தில் 1.500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். பொங்கல் பண்டிகை தினமான இன்று அவனியாபுரத்திலும், நாளை பாலமேட்டிலும், நாளை மறுநாள் அலங்காநல்லூரிலும் அடுத்தடுத்து போட்டிகள் நடக்கின்றன.
போட்டியில் கலந்து கொள்ளும் காளைகளுக்கு உரிய முறையில் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. காளைகள் ஏற்கனவே பெற்றிருந்த பதிவு எண்ணின்படி வரிசையாக மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. காளையின் உடல்நிலை எப்படி உள்ளது. அதன் வயது, ஊக்க மருந்து ஏதேனும் பயன்படுத்தப்பட்டு உள்ளதா, கொம்பின் அளவு என்ன என அனைத்தும் சரிபார்க்கப்பட்ட பின்னரே களத்தில் இறக்கிவிடப்பட்டன பின்னர், மாவட்ட கலெக்டர் முன்னிலையில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றனர். அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
சீறி வரும் காளைகளை போட்டி போட்டு கொண்டு வீரர்கள் பிடிக்க தயாராகி உள்ளனர். வாடிவாசலில் இருந்து 1,100 காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்படுகின்றன. முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் சார்பில் டிராக்டர் மற்றும் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் காரும் பரிசாக வழங்கப்படுகிறது. இதில், முதல் பரிசு பெறும் காளைக்கு பெறும் காளைக்கு, விவசாயத்திற்கு பயன்படும் டிராக்டர் பரிசாக வழங்கப்படுகிறது. முதல் பரிசு பெறும் வீரருக்கு கார் பரிசாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..