புதுச்சேரி பள்ளியில் சுவர் இடிந்து விழுந்து விபத்து…!!
புதுச்சேரியில் பள்ளியில் சுவர் இடிந்து விழுந்ததில் மூன்று மாணவர்களுக்கு காயமடைந்த நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
புதுச்சேரி மணவெளி தொகுதிகுட்பட்ட புதுகுப்பம் பகுதியில் அரசு ஆரம்ப பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்குள்ள மைதானத்தில் விளையாட்டு இடைவெளியின்போது மாணவர்கள் விளையாடிக்கொண்டிருந்த போது, அருகில் பழுதடைந்த நிலையில் இருந்த மாணவர்கள் கை கழுவும் தொட்டியின் சுவர் திடீரென இடிந்து மாணவர்கள் மீது விழுந்தது. இதில் நான்காம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் பவன்குமார், பவின் மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவி தேஷ்தா ஆகிய மூன்று மாணவர்களுக்கு கை, கால்களில் காயம் ஏற்பட்டு. உடனே ஆசிரியர்கள் அவர்களை மீட்டு அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம், மணவெளி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், சபாநாயகரும் செல்வம் ஆகியோர், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவர்களை நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறினர். மேலும் மாணவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கும்படி மருத்துவர்களிடம் அறிவுறுத்தினர்.