திண்டுக்கல்லில் பழைய பாரம்பரிய முறைப்படி 15 மாட்டு வண்டிகளில் சீர் கொண்டு வந்து தாய்மாமன்கள் அசத்தியுள்ளனர்.
திண்டுக்கல் முருக பவனத்தை சேர்ந்தவர் ஜெயபால். இவர் டீக்கடை நடத்தி வருகிறார். இவரது மகள் ரம்யாவிற்கு பூ புனித நீராட்டு விழா இன்று 30.04.23 முருகபவனத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் தாய் மாமன் பெருமாள் மற்றும் அவரது தம்பிகள் தனது அக்கா மகளுக்கு செய்ய வேண்டிய சீர்வரிசை பொருட்களான பட்டு சேலை, தங்க நகைகள், பழங்கள், அரிசி மூட்டை, ஆடு, பலசரக்கு சாமான் பித்தளை பாத்திரம், சில்வர் பாத்திரம், பூமாலை,கேக் வகைகள் ஆகியவற்றை 15 மாட்டு வண்டிகளில் வைத்து ஊர்வலமாக பழனி சாலை வழியாக மேளதாளங்கள் முழங்க தாரை தப்பட்டைகள் அடிக்க வானவேடிக்கையுடன் கல்யாண மண்டபத்திற்கு எடுத்து வந்தனர்.
நவீன கம்ப்யூட்டர் காலத்தில் மாட்டுவண்டி என்றாலே என்னவென்று தெரியாத தற்பொழுது உள்ள இளைஞர்கள் மத்தியில் பழமையை போற்றி பாதுகாக்கும் வகையில் பாரம்பரிய முறைப்படி சீர்வரிசை கொண்டு வரப்பட்டது.
Discussion about this post