தமிழ்நாட்டில் பள்ளிகளில் உடற்கல்வி பாட வேளைக்கு அனுமதி வழங்கி பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
உடற்கல்வி பாடவேளை நடத்துவது தொடர்பாக தமிழகம் முழுவதும் உள்ள முதன்னை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை ஆணையர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், நடப்பு கல்வியாண்டில் 6 முதல் 9 வரையிலான வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கு உடற்கல்வி பாடத்திட்டத்தின்படி விளையாட்டு மைதானத்தில் அவ்வகுப்புகளை நடத்தலாம். பொதுத்தேர்வு காரணமாக 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கு உடற்கல்வி வகுப்புகள் இந்த ஆண்டு கிடையாது.
மேலும் தமிழக அரசு வழங்கி உள்ள பாதுகாப்பு வழிமுறைகளை முழுமையாக பின்பற்றி உடற்கல்வி இயக்குநர் மற்றும் ஆசிரியர்கள் மூலம் உடற்பயிற்சி வழங்குமாறும், அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.