“ஒரு தமிழர் பிரதமராவதை ப்ரவுட் கன்னடிகா விரும்பாத அண்ணாமலை” பதிலடி கொடுத்த அதிமுக..!!
கூட்டணி முறிந்ததில் இருந்தே மோதிக்கொள்ளாமல் இருந்த அதிமுகவும் பாஜாகவும் இப்போது பஞ்சாயத்தை கூட்ட ஆரமித்துள்ளனர்.. எடப்பாடி பழனிசாமி பிரதமராக அனைத்து தகுதியும் உண்டு.. என அதிமுக சொன்னதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நக்கலடித்துள்ளார்.., இது அதிமுகவிற்கு கடுப்பை கிளப்பியுள்ளது..
தமிழ்நாடு முழுவதும் அதிமுகவின் 52ம் ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் பொதுக்குழு கூட்டம் நடத்த திட்டமிட்டனர்.., அந்த வகையில் விருதுநகர் பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி..,
40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்றால்., எடப்பாடி பழனிசாமி பிரதமராகி விடுவார் என கூட்டத்தின் மேடையில் பேசியுள்ளார்..
இதுகுறித்து அண்ணாமலையிடம் கேட்டபோது சிரித்தபடி.., அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சிரித்தபடி பேசுவார்.., இப்பவும் அப்படி தான் அந்த மேடையில் பேசியது.., அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு நகைச்சுவை உணர்வு அதிகம் என சொல்ல இது தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது..
இதுபற்றி பாஜக மாநில பொதுச்செயலாளர் கார்த்திகேயனிடம் கேட்டதற்கு, “அதிமுக என்ற ஒரு கட்சி தமிழ்நாட்டை தவிர வேறு ஏதாவது ஒரு மாநிலத்தில் இருக்கிறதா..? கும்மிடிப்பூண்டியை தாண்டினாலே அதிமுக கட்சி பெயரை சொன்னால் யாருக்கும் தெரியாது.., இப்படி இருக்கும் போது.., எடப்பாடி பிரதமர் என சொன்னால் சிரிப்புதான வரும்.
ஒரு கட்சியில் எத்தனை எம்.பி இருக்கனும் நீங்க சொல்லுங்க.., அதிமுகவில் அப்படி எத்தனை எம்.பிக்கள் இருக்கிறார்கள்.., அதிமுகவில் இருந்த ஒரு படித்த எம்.பியும் இப்போ இல்லை. இப்படி இருக்க ஒரு கட்சி தலைவர்.., மன்னிக்கவும் அதிமுகவுக்கு அவர் தான் கட்சி தலைவரானு கூட தெரியல அப்படி இருக்க அப்போ எடப்பாடி பிரதமர் சொன்னா யாருக்கு தான் சிரிப்பு வராது..
இந்த கேள்விகளுக்கு அதிமுக செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் பதிலடி கொடுத்துள்ளார்.., இந்தியா முழுக்க கட்சி இருக்க என பாஜக கேட்டாங்க சரி.. அதிமுகவிற்கு இந்தியா முழுவதும் கட்சி கிடையாது தான்.., ஆனா வி.பி.சிங், தேவகவுடா, ஐ.கே.குஜ்ரால் போன்றவர்கள் இந்தியா முழுவதும் கட்சி வைத்துதான் பிரதமர் ஆனார்களா..?
ஒரு தமிழன்.., விவசாயி பிரதமர் ஆவதை பாஜக ஏற்றுக்கொள்ளவில்லை.. கிளை செயலாளர் பதவியில் இருந்து உழைப்பால் முன்னேறி தற்போது பொதுச்செயலாளராக எடப்பாடி முன்னேறியுள்ளார்.., அது பாஜகவிற்கு பிடிக்கவில்லை..
பிரதமர் மோடி மற்றும் என்ன ஆரம்பத்தில் இருந்தே அரசியலில் இருந்தாரா..? ஆரம்பத்தில் டீ விற்று.., பாஜகவில் இணைந்து பிரதமர் ஆகினார், ஐபிஎஸ் பதவியை ராஜினாமா செய்துவிட்டு 39 வயதில் ஒருவர் மாநில செயலாளராக ஆகும் போது 50 ஆண்டு அரசியில் அனுபவம் கொண்ட ஒருவரால் பிரதமர் ஆக முடியாதா..? என் நெற்றி பொட்டில் அடித்த படியான பதிலடியை கொடுத்துள்ளார்..
Discussion about this post