சனியை கட்டுப்படுத்தும் மார்தண்டாவர்..! எப்படி வழிபட வேண்டும்..!!
கடந்த சில தினங்களாக ஆன்மீக தகவல்கள்.., திருத்தலங்கள்.., மற்றும் சில பரிகாரங்கள், பற்றி பார்த்து வருகிறோம். அதில் இன்று தெரிந்துக்கொள்ள இருக்க வேண்டிய தகவல்..
சனி பகவான் பிடியில் இருந்து வெளிவர முடியவில்லையா..?, பல பரிகாரங்கள் செய்து முடித்தும் சனி தோஷம் நீங்க வில்லையா..? அல்லது சனி தோஷம் நீங்க என்ன செய்வது என தெரியாமல் தவிக்கிறீர்களா..? இந்த வழிபாடு செய்து பாருங்கள்.
பைரவர் மந்திர, யந்திர, தந்திர நாயகரானவர். பூத வேதாள பிரேத பிசாசு கூட்டங்களை விரட்டும் பெருங்கருணை கொண்டவர். இவரே சனிஷ்வர பகவானின் கூறுவாகவும் விளங்குகிறார். இந்த பைரவரை வணங்குவதால் ஏழரை நாட்டுச் சனி, ஜென்மச்சனி, அஷ்டம சனி, அர்தாஷ்டம சனி போன்றவற்றில் இருந்து விடுபட்டு விடலாம்.
பைரவரை வழிபட்டு வந்தால்.., சகல சௌபாக்கியமும் கிடைக்கும்.. என்பது ஐதிகம். இவ்வளவு ஐஸ்வர்யங்கள் அள்ளி தரும் பைரவர், சூரிய பகவானின் அம்சங்களை கொண்ட “மார்தாண்ட பைரவராக ” அருள் பாலிக்கிறார். லலிதா ஸஹஸ்ஹரநாமம் ‘‘மார்த்தாண்ட பைரவாராத்யா’’ (மார்த்தாண்டன் எனும் சூரியபகவானின் அம்சமான பைரவரால் ஆராதிக்கப்படுபவள்) என இந்த பைரவரைப் போற்றுகிறது.
அகத்தியரும் தன் ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்திரத்தில் இந்த பைரவரைப்பற்றி குறிப்பிட்டுள்ளார். மார்த்தாண்ட பைரவரின் த்யான ஸ்லோகத்தின்படி வரையப்பட்ட அபூர்வமான திருவுருவை தரிசித்து மகிழலாம்.
மேலும் இதுபோன்ற பல ஆன்மீக தகவல்கள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..
Discussion about this post