ஆணவபடுகொலைக்கு ஆதரவானபடம்..!! எதிரான நடிகர்..!!!
நடிகர் ரஞ்சித் இயக்கி நடித்திருந்த திரைப்படம் கவுண்டம்பாளையம். இந்த படம் பல சர்ச்சைகள் மற்றும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நேற்று திரையரங்கில் வெளியானது. இந்த படத்தை பார்த்த பிறகு நடிகர் ரஞ்சித் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அந்த பேட்டியில் அவர் கூறி இருப்பது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
ரஞ்சித் கூறியதாவது:
ஆணவ படுகொலை குறித்த காட்சிகள் படத்தில் இடம் பெற்று இருப்பது குறித்து கேள்வி எழுப்ப பட்டது. அதற்கு பதில் அளித்த அவர் பெற்றவர்களுக்கு தான் வலி தெரியும், பைக்கை திருடி சென்றாலே உடனே போய் அடிப்பதில்லையா? பெற்ற பிள்ளையே வாழ்க்கை என இருப்பவர்கள் பிள்ளைகளின் வாழ்க்கை பாதிக்கப்படுகிறது என்ற அக்கறையினால் வரும் கோவம் தான் அது, அது வன்முறை அல்ல” என கூறி அதிர வைத்தார்.
சமீப மாதங்களகாவே ஆணவ படுகொலை ஆங்கங்கே அரங்கறி வரும் நிலையில் நடிகர் ரஞ்சித் இவ்வாறு கூறியிருப்பது பெரும் அதிர்டலையை ஏற்படுத்தயது. காட்டு தீயாய் பரவும் இந்த வீடியோவுக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
சர்ச்சைக்கு விளக்கம் :
தற்போது இது குறித்து விளக்கம் அளித்துள்ளார். அதில் என் மீது உள்ள தேவையற்ற வன்மத்தை தவிர்த்து விடுங்கள் என கைகூப்பி கேட்டுக் கொள்கிறேன். சமூக வலைத்தளங்களில் நான் கூறிய கருத்துக்கள் திரித்து திரித்து கூறப்பட்டு மக்களிடம் போய் சேர்கிறது.
நான் ஆணவ கொலைக்கு எதிரானவன். தான் ஆணவ கொலைக்கு ஆதரவானவன் அல்ல. மேலும் இதுமாதிரியான தேவையில்லாத கருத்துகளை தவிர்த்துடுங்கள்” என்றும் தாய்மார்கள் அனைவரும் இந்த படத்தை திரையரங்குகளில் பாருங்கள் என்று கூறியுள்ளார்.
-பவானி கார்த்திக்