திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே 3- ஆம் வகுப்பு மாணவன் மீது தனியார் பேருந்து மோதியதில், மாணவன் சம்பவ இடத்திலேயே உயிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வாணியம்பாடி அடுத்த நரசிங்கபுரம் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் – பானுமதி தம்பதியினரின் மகன் தரணி. 3- ஆம் வகுப்பு பயிலும் இவர் தனது பெற்றோருடன் வாணியம்பாடி அடுத்த கலந்திரா பகுதியில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு சென்றுள்ளார். அப்பொழுது தரணி சாலையை கடக்க முயன்றபோது திருப்பத்தூரிலிருந்து வாணியம்பாடி நோக்கி அதிவேகமாக வந்த தனியார் பேருந்து, சாலையை கடக்க முயன்ற மாணவன் மீது மோதியது.
இதில் மாணவன் சிறிது தூரம் இழுத்துச்செல்லப்பட்ட நிலையில் மாணவனை மீட்ட அப்பகுதி மக்கள் சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனையில், சிகிச்சை பலனின்றி மாணவன் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், பேருந்தை சிறை பிடித்த அப்பகுதி மக்கள், பேருந்தின் கண்ணாடியை உடைத்து ஓட்டுநரை சரமாரியாக தாக்கி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் சாலைமறியலில் ஈடுப்பட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தின் பேரில் மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். . 3- ஆம் வகுப்பு பயிலும் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Discussion about this post