சென்னை வரும் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு..!!
குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு இன்று சென்னைக்கு வருகை தருவதையொட்டி, 5 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா்.
சென்னை அருகே உத்தண்டி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் 8-ஆவது பட்டமளிப்பு விழா நாலை நடைபெறுகிறது.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு கலந்து கொள்கிறார் இதற்காக அவா், கா்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு சென்னை விமான நிலையத்துக்கு இன்று இரவு 7 மணியளவில் வருகிறார்.
நாளை காலை 9 மணி முதல் 9.30 மணி வரையில் அவரை முக்கிய பிரமுகா்கள் சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு ஆளுநா் மாளிகையில் இருந்து திரெளபதி முா்மு காரில் பட்டமளிப்பு விழா நடைபெறும் இந்திய கடல்சார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்கிறார்.
இந்நிலையில், குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு இன்று சென்னைக்கு வருகை தருவதையொட்டி, 5 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா்.
தமிழக ஆளுநா் மாளிகை நுழைவு வாயில் முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து குடியரசுத் தலைவா் வருகைக்கு, பாதுகாப்பு ஏற்பாடுகள் மேலும் அதிகரிக்கப்படுகிறது.
சென்னை விமான நிலையம், கிண்டி ஆளுநா் மாளிகை, பட்டமளிப்பு விழா நடைபெறும் பல்கலைக்கழக வளாகம் ஆகிய இடங்களில் மூன்றடுக்கு பாதுகாப்பு வழங்கப்படுகிறது.