போஸ்டர் அடி அண்ணன் ரெடி..!! இது தான் ரியல் லியோ ட்ரீட்..!!
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் லியோ படத்தின் வெற்றி விழாவிற்கு அனுமதி..
அக்டோபர் 19ம் தேதி நடிகர் விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான படம் தான் “லியோ”..,
படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியான நாளில் இருந்தே பல சிக்கல்கள் ஏற்பட்டது.., நடிகர் விஜய் சிகரெட் பிடிப்பது, அரசியல் பேசுகிறார், என பல வதந்திகள் மற்றும் பல விமர்சனங்கள் எழுந்தது..
சிலர் படம் சரியாக இல்லையென போலி விமர்சனம் செய்தனர்.., எத்தனை தடைகள் வந்தாலும் அதை உடைத்து லியோ படம் 7 நாளில் 461 கோடியை வசூல் செய்துள்ளது..
அந்த வெற்றியை கொண்டாடும் விதமாக சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் ஏற்பாடு செய்ய திட்டமிட்டனர்.. ஆனால் அதற்கும் தடைகள் எழுந்தது.
அனுமதி வேண்டுமென்றால் கடிதம் கொடுக்க கூடாது, இ-மெயிலில் அனுமதி கேட்டு மெயில் அனுப்ப வேண்டும், 5000 ரசிகர்களுக்கு மேல் அனுமதியில்லை, என பலவும் முன் வைக்கப்பட்டன..
ஆனால் தற்போது லியோ படத்தின் வெற்றிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது, விஜய் மக்கள் இயக்கத்தின் தலைவர் புஸ்ஸி ஆனந்த் அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்.
இந்த செய்தி வெளியானதில் இருந்தே தளபதியின் ரசிகர்கள் அனைவரும் வெயிட்டிங் பார் குட்டி ஸ்டோரி.., எனவும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
Discussion about this post