விபத்தில் காவல் ஆய்வாளர் உயிரிழப்பு..!! முதலமைச்சர் ஸ்டாலின் நிதியுதவி..!!
தஞ்சாவூர் மாவட்டம் பாப்பாநாடு சாலை விபத்தில் உயிரிழந்த காவல் துறை தனிப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை சிறப்பு உதவி ஆய்வாளரின் குடும்பத்திற்கு மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் இரங்கல் மற்றும் நிதியுதவியை அறிவித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்ட தனிப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறையில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணியாற்றிவந்த திரு.செந்தில்குமார் (வயது 49) நேற்று பிற்பகல் 3.15 மணியளவில் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழா பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார்.,
பணிகள் முடித்து மீண்டும் காவல் நிலையம் செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் பட்டுக்கோட்டை நோக்கி சென்றபோது, தஞ்சாவூர்-பட்டுக்கோட்டை சாலையில் கறம்பியம் அருகில் லாரி மோதி விபத்துக்குள்ளானது..
அந்த விபத்தில் காவல் ஆய்வாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.. இந்த விபத்து குறித்து தகவலறிந்து வந்த காவலர்கள் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.. மேலும் இந்த விபத்துகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த முதலமைச்சர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.. மிகுந்த வருத்தமும், வேதனையும் அடைந்தேன். சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.செந்தில்குமார் அவர்களின் உயிரிழப்பு தமிழ்நாடு காவல்துறைக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.செந்தில்குமார் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்கள் மற்றும் அவருடன் பணிபுரிபவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு இருபத்தைந்து இலட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.
தஞ்சாவூர் மாவட்டம், பாப்பாநாடு சாலை விபத்தில் உயிரிழந்த காவல் துறை தனிப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை சிறப்பு உதவி ஆய்வாளரின் குடும்பத்திற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இரங்கல் மற்றும் நிதியுதவி அறிவித்துள்ளார்…