65 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் 19 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் செந்துறை அருகே ரெங்கைய சேர்வைகாரன்பட்டியை சேர்ந்த பழனிசாமியின் மனைவி பெரியம்மாள் 65. இவர் தனது வீட்டிற்கு எதிரே உள்ள கருவேலம் காட்டில் கொலை செய்யப்பட்ட நிலையில் மார்ச் 11ம் தேதி சடலமாக மீட்கப்பட்டார்.
இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வந்த போலீசார், மூதாட்டியின் பக்கத்து வீட்டை சேர்ந்த 19 வயது இளைஞர் சரவணக்குமார் என்பவரிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், மூதாட்டியை மது போதையில் வலுக்கட்டாயமாக கற்பழித்து கொன்றதாகவும், பின்பு மூதாட்டியின் தங்க மூக்குத்தியை திருடியதாகவும் ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து, இளைஞரிடமிருந்து மூக்குத்தியை பறிமுதல் செய்த போலீசார், அவரை கைது செய்தனர்.