உக்ரைன் செல்லும் பிரதமர் மோடி..!! முடிவுக்கு வருமா இந்த போர்..?
உக்ரைன் மீது ரஷ்யா நாடு கடந்த 2022 பிப்ரவரி 24ம் தேதி தொடுத்த போர் 3 ஆண்டுகளை கடந்தும் நீடித்து வருகிறது. இந்த போரில் உக்ரைனின் பல பகுதிகளை ரஷ்யா கைப்பற்றியது. இருப்பினும் ரஷ்யாவை எதிர்த்து உக்ரைன் தொடர்ந்து போராடி வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பொருளாதார ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் உதவி அளித்து வருகிறது என்பது குறிப்பிடதக்கது.
போரை நிறுத்துமாறு சர்வதேச நாடுகள் ரஷ்யா கூறியும் ரஷ்யாவிடம் வலியுறுத்தியும் அதனை பொருட்கொள்ளாமல் உக்கரைன் மீது போர் தொடுத்து வந்தனர். ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே போர் தொடங்கியதில் இருந்தே பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்வு காண முடியும் என இந்தியா தொடர்ந்து கூறி வருகிறது.
இந்தநிலையில் அரசுமுறை பயணமாக பிரதமர் நரேந்திர மோடி வரும் 23ம் தேதி உக்ரைனுக்கு செல்ல இருப்பதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. முதலில் வரும் 21ம் தேதி போலந்துக்கு பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி, இரண்டு நாட்களுக்குப் பிறகு 23ம் தேதி உக்ரைனுக்கு செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி அழைப்பை ஏற்றுக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி அரசு முறை பயணமாக இந்த வார இறுதியில் வரும் 23ம் தேதி உக்ரைன் நாட்டுக்குச் செல்ல இருப்பதாகவும் பிரதமர் மோடியின் இந்த பயணம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பயணமாகும் என் கூறியுள்ளது.
மேலும் உக்ரைன் உடனான தூதரக உறவுகளை ஏற்படுத்திய பிறகு, சுமார் 30 ஆண்டுகளுக்குப் பின் இந்தியப் பிரதமர் ஒருவர் உக்ரைனுக்குச் செல்வது இதுவே முதல் முறையாகும்” எனத் தெரிவித்துள்ளார். இரு நாட்டு தலைவர்களுக்கு இடையிலான அதிகபடியான விவகாரங்கள் குறித்து விவாதிக்க இந்தப் பயணம் இருக்கும். முக்கியமாக ரஷ்யா – உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், எந்தவிதமான பேச்சுவார்த்தைக்கும் இந்தியா ஆதரிக்கிறது என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
-பவானி கார்த்திக்
தொடர்கதை -2 – Written – 500
“தோல்வியை கண்டு அஞ்சாதே வெற்றியை கண்டு கர்வம் கொள்ளாதே”