திட்டக்குடி அருகே ரேஷன் அரிசியில் செறிவூட்டப்பட்ட அரிசியை பிளாஸ்டிக் அரிசி என்று நினைத்து கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே ஆலம்பாடி கிராமத்தில் நேற்று ரேஷன் கடையில் அரிசி விநியோகம் செய்யப்பட்டுள்ளனர் அந்த அரிசியை பொதுமக்கள் வாங்கி சமைத்து வருகின்றனர். கடந்த நான்கு மாதமாக ரேஷன் கடையில் வழங்கப்படும் அரிசியல் வெள்ளை நிற அரிசிகள் கலக்கப்பட்டு வருவதாக கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று இரவு அரிசி ஊற வைத்த போது அதில் ஊறிய அரிசிகள் வெள்ளை நிறத்தில் சமைக்காமலே சாதம் போல் காணப்பட்டுள்ளது. இதனால் கிராமத்தில் இருந்த பொதுமக்கள் பிளாஸ்டிக் அரிசி என்று நினைத்து அச்சம்பட்டு வருகின்றனர் ரேஷன் கடையில் விநியோகம் செய்யப்பட்ட அரிசியில் செறிவூட்டப்பட்ட அரிசி இருந்ததா இல்லை பிளாஸ்டிக் அரிசியா என தெரியாமல் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.