உக்ரைன் – ரஷ்யா போர் எதிரொலியாக கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் பெட்ரோல், டீசல் விலை உயர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப, எரிபொருள் விலையை தினசரி நிர்ணயிக்கும் நடைமுறை இருந்து வருகிறது. அதன்படி, எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை மாற்றியமைத்து வருகின்றன.
இதற்கிடையில், கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் 3ஆம் தேதி, மத்திய அரசு பெட்ரோல் மீதான கலால் வரியில் 5 ரூபாயையும், டீசல் மீதான கலால் வரியில் 10 ரூபாயையும் குறைத்து அறிவித்தது.
இதனை தொடர்ந்து, கடந்த 3 மாதங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து கட்டுக்குள் இருந்து வருகிறது.
இந்நிலையில், உக்ரைன் – ரஷ்யா இடையே ஏற்பட்ட போர் சூழல் காரணமாக கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு 130 அமெரிக்க டாலர் அளவிற்கு உயர்ந்தது. அதன்பின், அடுத்தடுத்த நாட்களில் பங்கு சந்தைகளின் மதிப்பு உயர்வடைந்தது.
இதனால் சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து 124வது நாளாக இன்றும் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, சென்னையில் இன்று(மார்ச்.08) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.101.40-க்கும், அதைப்போல், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.91.43-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
முன்னதாக, 2012 ஆம் ஆண்டிற்குப் பின் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது இதுவே முதல் முறையாகும். இதன் காரணமாக, சென்னையில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.23 வரை உயரலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post