நீதிமன்றங்களில் மனு தாக்கல்…!! விதிக்கப்பட்ட புதிய நிபந்தனைகள்…!!
தமிழக அரசு சார்பில் நீதிமன்றங்களில் மனு தாக்கல் செய்ய புதிய நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது
தமிழகத்தின் அரசு சார்பில் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் மனுக்களுக்கு புதிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தலைமைச் செயலாளர் முருகானந்தம் மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தின் முதல் அமர்வு விதித்த இந்த உத்தரவை ரிட் மனு 9-ம் விதிப்படி பின்பற்றப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அரசு துறை அலுவலர்கள், மாவட்ட ஆட்சியர்கள் சமர்ப்பிக்கும் மனுக்களை அரசு வழக்கறிஞர்கள் மட்டுமே சான்றளிக்க வேண்டும், என்றும் அந்த வழக்கில் ஆஜராகும் வழக்கறிஞர்கள் சான்றளிக்கக் கூடாது என்றும் இதனை அரசு பிளீடர்கள் செய்துதர வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.
அதாவது நீதிமன்றத்தில் தங்களது கோரிக்கை மனுக்களை தாக்கல் செய்யும் அரசு அலுவலர்கள் மற்றும் செயலாளர்கள்., தக்க ஆவணங்களுடன் நோட்டரியிடம் உரிமம் பெற்று அதனை, அரசு வழக்கறிஞர்களிடம் கொடுத்து அவர்கள் அதனை பரிசீலனை செய்த பின்னரே சமர்ப்பிக்க வேண்டும். அப்படி சமர்பிக்கும் வழக்கறிஞர்கள் உங்களது சார்பில் அவர்கள் வாதாடி இருக்க கூடாது..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..