பெரியப்பாளையம் பவானி அம்மன் தங்கதேர் தரிசனம்..!!
பெரியபாளையம் அருள்மிகு பவானியம்மன் திருக்கோயிலுக்கு 8.54 கோடி செலவில் புதிய தங்கத்தேரை திரு. ஆர். காந்தி மற்றும் திரு.பி.கே.சேகர்பாபு ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.கஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு ஆகியோர் திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருள்மிகு பவானியம்மன் திருக்கோயிலுக்கு 8,54 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ள புதிய தங்கத்தேரின் வெள்ளோட்டத்தினை தொடங்கி வைத்தனர்.
159 கோடி ரூபாய் செலவில் கோவில் திருப்பணிகள் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் 12ம் தேதி கோவில் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.. பின் கோபுர கலசத்திற்கும் பிரகார மூர்த்தங்களுக்கும் குடமுழுக்கு நடைபெற்றது நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து புனித தீர்த்தம் எடுத்துவரப்பட்டு கோவிலின் மீது ஊற்றப்பட்டது.. அதன் பின்னர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது…
2022-2023 ஆம் நிதியாண்டிற்கான சட்டமன்ற மானியக் கோரிக்கையின்போது பெரியபாளையம் அருள்மிகு பவாளி அம்மன் திருக்கோயிலுக்குப் புதிய தங்கத்தேர் 8 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்படும்” என அறிவிக்கப்பட்டது. அறிவிக்கப்பட்டதை போல இந்த ஆண்டு தங்கதேரை கோவிலில் எடுத்துவரப்பட்டது. இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர்கள், அலுவலர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்…
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..