கரூர் மக்களே உஷார்..!! இந்த ரூல்ஸ் பஃளோ பண்ணலைனா அப்புறம்..?
மக்களவைப் பொது தேர்தல் 2024, அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து கரூர் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தேர்தல் தொடர்பான புகார்கள் தொலைபேசி மூலம் பதிவு செய்யப்பட்டு உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. தேர்தல் தொடர்பாக புகார்கள் தெரிவிக்க வேண்டிய கட்டணமில்லா தொலைபேசி எண் 1800-425-5016 மேற்காணும் தொலைபேசி எண்ணில் பொது மக்கள் புகார்களை 24 மணிநேரமும் தெரிவிக்கலாம் என கூறினார்.
கரூர் மாவட்டத்தில் பறக்கும் படையினர் வாக்காளர்களுக்கு பரிசுப் பொருட்கள், பணம் கொடுப்பதை தவிர்க்கும் பொருட்டு 24 மணிநேரமும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பறக்கும் படையினர் மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுவினரால் கைபற்றப்படும் பணம் மற்றும் இதர பொருட்கள் ESMS என்ற செயலி மூலம் பதிவு செய்யும் வசதி தற்போது புதியதாக தொடங்கப்பட்டுள்ளது.
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் கட்டுப்பாட்டு அறையில் C-Vigil என்ற செயலியின் மூலம் பொதுமக்கள் தெரிவிக்கும் புகார்களை கண்காணிக்க அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
முக்கிய தேர்தல் விதிமுறைகள்
1. தேர்தல் பிரசாரத்தின் போது எந்த ஒரு அரசியல் கட்சியோ அல்லது வேட்பாளரோ பல்வேறு சாதியையோ, மதத்தையோ வைத்து வெறுப்பை தூண்டும் வகையில் பிரச்சாரம் செய்யக்கூடாது.
2. மற்ற அரசியல் கட்சி தலைவர்களின் பொது வாழ்க்கை குறித்து விமர்சனம் செய்யக்கூடாது.
3. மற்ற அரசியல் கட்சிகளையோ அல்லது கட்சியின் ஊழியர்கள் மீது குற்றச்சாட்டுகள் சுமத்துவது தவிர்க்க வேண்டும்.
4. வேட்பாளரோ அல்லது அரசியல் கட்சியோ, பிரசார கூட்டம், பிரசாரத்திற்கு ஒலிபெருக்கி பயன்படுத்துவது, வாகனம், ஊர்வலம், தற்காலிக கட்சி அலுவலகம், மற்றும் இதர அனுமதிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டுள்ள இணையதள Suvidha App மூலம் விண்ணப்பித்து முன் அனுமதி பெற வேண்டும். இதன் மூலம் காவல் துறையினர் உரிய வகையில் போக்குவரத்தை சரிசெய்யவும், சட்டம் மற்றும் ஒழுங்கை பராமரிக்க ஏதுவாகும்.
5. தேர்தல் நடத்தும் அலுவலரது அலுவலகத்திலிருந்து 100 மீட்டருக்குள் 3 வாகனங்கள் மட்டுமே செல்ல அனுமதி வழங்கப்படும். வேட்பு மனு தாக்கல் செய்ய 5 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
6. தேர்தல் பிரச்சாரங்களை, தேர்தல் நாளிற்கு 48 மணி நேரத்திற்கு முன்பு நிறுத்தப்பட வேண்டும். பொதுக் கூட்டங்கள் மற்றும் ஊர்வலம் நடத்த அனுமதியில்லை.
7. வேட்பாளரோ அல்லது அவரது கட்சியை சார்ந்தவர்களோ வாக்குபதிவு நாள் அன்று வாக்காளர்களை வாக்கு சாவடி மையங்களுக்கு அழைத்து செல்ல அனுமதியில்லை.
8. அரசியல் கட்சிகள் பிளாஸ்டிக் அல்லது பாலிதீன் கொண்டு விளம்பர சுவரொட்டி மற்றும் பேனர்கள் வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு மற்றும் தனியார் கட்டிடங்களில் அரசியல் கட்சிகள் விளம்பரம் செய்யக் கூடாது.
என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்த்துள்ளார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..