லீவு விட்டாச்சு..!! உங்கள கூட்டிட்டு போக நான் வரேன்..!! சிறப்பு ரயில் இயக்கம் எப்போ..?
கோடை விடுமுறை என்றாலே பலரும் அவர்களது சொந்த ஊருக்கு செல்வது வழக்கம்.., மற்றும் ஒரு சிலர் அவர்களது குடும்பங்களுடன் சுற்றுலா மற்றும் கோவில்கள் என செல்வது வழக்கம். எனவே இந்த சமயங்களில் கூட்ட நெரிசல்களை தவிர்க்க கூடுதல் இரயில்கள் இயக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு கூடுதல் சிறப்பு ரயில் இயக்கம் எப்போ தெரியுமா..?
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில்.., நாகர்கோவிலில் இன்று மற்றும் வரும் 21-ந் தேதி மாலை 5.45 மணிக்கு புறப்படும் அதிவிரைவு இரயில், மறுநாள் மதியம் 12.10 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும். மறுமார்க்கமாக, சென்னை சென்டிரலில் இருந்து நாளை மற்றும் வரும் 22ம் தேதி 3.10 மணிக்கு புறப்படும் அதிவிரைவு சிறப்பு இரயில் மறுநாள் காலை 8.30 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.
அதேபோல், நாகர்கோவிலில் இருந்து வரும் 14, 28 ஆகிய தேதிகளில் புறப்படும் அதிவிரைவு சிறப்பு இரயில் மறுநாள் சென்னை சென்ட்ரல் வந்தடையும்.
சென்னை சென்ட்ரல் டூ நாகர்கோவில் :
சென்னை சென்ட்ரலில் இருந்து ஏப்ரல் 15 மற்றும் 29 ஆகிய தேதிகளில் மதியம் புறப்படும் சிறப்பு இரயில் மறுநாள் காலை 8.30 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். என இரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
சென்னை நாகர்கோவில் இடையே இயக்கப்படும் இரயிலானது சென்னையிலிருந்து புறப்பட்டு அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, திருப்பத்தூர், மொரப்பூர், சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல் கொடைக்கானல், விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, மற்றும் வாஞ்சிமணியாச்சி, நெல்லை ஆகிய நிறுத்தங்களில் நின்று நாகர்கோவிலை சென்றடையும்.
பொதுவாக பொங்கல், தீபாவளி, ஈஸ்டர், ரம்ஜான் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் பயணிகள் எந்தவித சிரமமும் இன்றி பயணிக்க ஏதுவாக இருக்கும் என்பதால் இந்த ஆண்டு கூடுதல் சிறப்பு ரயில்களும் பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..