ஒட்டன்சத்திரம் பகுதிகளில் சிறுத்தை நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வனச்சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே சிறுத்தைகள் நடமாட்டம் உள்ளதாக பொதுமக்களிடையே பேசப்பட்டு பீதியில் இருந்தனர். இதனை உறுதிப்படுத்துவது போல் நேற்று இரவு ஒட்டன்சத்திரம் அருகே உள்ள சாமியார் புதூர் வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலையின் புறவழிச்சாலையில் சிறுத்தை ஒன்று படுத்து உறுமி கொண்டிருந்தது.
அவ்வழியே பேருந்து மற்றும் கார் போன்ற வாகனங்களில் செல்வோர் தங்களது செல்போன்களில் வீடியோ புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோவை பார்த்த மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். மேலும் இச்சம்பவம் அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Discussion about this post