முகம் “தங்கம்” போல ஜொலிக்கனும்னா இதை ட்ரைப் பண்ணுங்க….
முகம் எப்போதுமே ஜொலிக்க வேண்டும். சருமத்துக்கு ஊட்டச்சத்து வேண்டும். ஆரோக்கியமாகவும் அழகாகவும் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் , குங்குமப்பூ க்ரீம் உபயோகிக்கலாம்.
கடைத் தெருக்களில் குங்குமாதி தைலம் என்று பல பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. குங்குமாதி தைலமும் சற்று அதிகமான விற்கப்படுகிறது.
மேலும் நம் வீட்டிலேயே ரெடி பண்ணும் குங்குமாதி க்ரீம், பார்லருக்கு சென்று அழகை கூட்டுவதை காட்டிலும் குறைந்த விலை தான்.
இந்த குங்குமாதி க்ரீம் சருமத்திற்கு நன்மை அளிக்கக் கூடியது. குங்குமாதி க்ரீம் எப்படி செய்வது என்பதை பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
கற்றாலை ஜெல்
குங்குமப்பூ
ஆலிவ் ஆயில்
பாதாம் ஆயில்
ரோஸ் வாட்டர்
வைட்டமின் ஈ கேப்ஸ்யூல்
செய்முறை:
ஒரு கிண்ணத்தில் குங்குமப்பூவை போட்டு அது மூழ்கும் அளவிற்கு ரோஸ் வாட்டர் சேர்த்து 10 நிமிடத்திற்கு அப்படியே வைக்க வேண்டும்.
பிறகு ஒரு பாத்திரத்தில் கற்றாலை ஜெல்லை போட்டு அதில் பாதாம் ஆயில், ஆலிவ் ஆயில், சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.
அதில் நாம் முன்பே கலந்து வைத்துள்ள குங்குமப்பூ கலவை மற்றும் வைட்டமின் ஈ எண்ணெய், ரோஸ் வாட்டர் சேர்த்து நன்றாக க்ரீம் பதத்திற்கு கலக்க வேண்டும். மாறாக பிளெண்டர் கொண்டும் பேஸ்ட் மாதிரி அடித்து கொள்ளலாம். தற்போது குங்குமாதி க்ரீம் ரெடி.
இந்த க்ரீமை காற்றுப்புகாத டப்பாவில் வைத்து உபயோகிக்கலாம்.
6 மாதத்திற்கு கூட கெட்டுப் போகாது.
குங்குமாதி க்ரீம் முகம், கை, கழுத்து ஆகிய அனைத்து பகுதிகளிலும் உபயோகிக்கலாம்.
சருமத்தில் இறந்த செல்கள் இருக்கும் வரை முகம் எப்போதும் மந்தமாக இருக்கும்.
முகத்தை பழுப்பு நிறமாக காண்பிக்கும்.
குங்குமாதி க்ரீமை பயன்படுத்துவதினால் முகத்தில் இருக்கும் இறந்த செல்கள் நீங்கி சருமத்துளைகளில் படிந்திருக்கும் அழுக்குகளை வெளியேற்றுகிறது.
குங்குமாதி க்ரீம் , சரும பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.