சென்னை அடையாறில் உள்ள டி.டி.வி. தினகரன் இல்லத்தில் தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் சந்திப்பு நடைபெற்று வரும் நிலையில் தொடர்ந்து இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து வருகின்றனர்.
தனி தனியாக செயல்பட்ட இருவரும் சேர்ந்து செயல்படுவது என முடிவெடுத்துள்ளதாக பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்தார். தொடர்ந்து செய்தியாளார்களை சந்தித்த டிடிவி தினகரன் CPI CPM போல சேர்ந்து செயல்பட முடிவெடுத்துள்ளதாகவும், உண்மை தொண்டர்களிடம் கட்சி இருக்க வேண்டும்
ஆணவம் அரக்கர்கள் போல செயல்படும் நபர்களிடம் இருந்து கட்சியை மீட்டு உண்மையான ஜெயலலிதா தொண்டர்களிடம் ஒப்படைக்க இணைந்து செயல்பட முடிவு செய்து உள்ளோம் என்றும் தெரிவித்தார்.
தொண்டர்கள் கடந்த 6 முதல் 7 மாதங்களாக எப்போது சந்திப்போம் என கேள்வி எழுப்பி வந்தனர் தற்போது கட்சியை மீட்க ஒன்று இணைந்து உள்ளோம் என்றார்.
மனது அளவில் பகை உணர்வு இல்லை ஏதோ காரணத்தால் தற்போது இணைந்து உள்ளோம். இந்த இணைப்பில் எந்த ஒரு சுயநலம் இல்லை கட்சியை மீட்க வேண்டும் என்றார்.
எடப்பாடி துரோகி என்றும், திமுக எதிரி என்றும் குறிப்பிட்ட டிடிவி தினகரன் நாடாளுமன்ற கூட்டணியை பொறுத்தவரை ஓபிஎஸ் கை பிடித்து இருட்டில் என்னால் செல்ல முடியும் ஆனால் எடப்பாடி கை பிடித்து செல்ல முடியாது எனக்கூறினார்.
அடுத்ததாக ஓ.பன்னீர்செல்வம் சசிகலாவை சந்தித்து ஆதரவு கோர இருப்பதாக வெளியாகியுள்ள தகவல்கள் அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.