பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி டேனிஷ் அலியை நோக்கி, ‘ஏய்.. இஸ்லாமிய தீவிரவாதி’ என்று பேசிய பாஜகவின் எம்.பிக்கு கடும் கண்டனம் வலுத்து வருகிறது.
புதிய நாடாளுமன்றத்தில் நடைப்பெற்ற நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், இதில் பெண்களுக்கான 33% இடஒதுக்கீடு நிறைவேற்றப்பட்டது. இதன் மீதான விவாதம் நிறைவடைந்தப் பிறகு, சந்திராயன் 3 வெற்றிகரமாக அனுப்பப்பட்டதற்கு இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவித்து விவாதம் நடந்தன.
இதில் மக்களவையில் பேசிய, பாஜக எம்.பி ரமேஷ் பிதுரி – பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி டேனிஷ் அலியை நோக்கி ‘ஏய்.. இஸ்லாமிய தீவிரவாதி’ என்றும், ‘பயங்கரவாதி’ என்றும் கடுமையான வார்த்தைகளால் பேசினார்.
இந்த சம்பவத்துக்கு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். இதனையடுத்து பாஜக எம்.பி பேசியது அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது. தொடர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வருகிறது. அதோடு இதுகுறித்து நாடு முழுவதும் பாஜகவுக்கு எதிராக கண்டன குரல்கள் ஓங்கியுள்ளது.
बीजेपी सांसद रमेश बिधूड़ी के लोकसभा में बीएसपी सांसद दानिश अली दिए गए विवादित बयान पर बवाल मचा हुआ है। रमेश बिधूड़ी के बयान पर दानिश अली की प्रतिक्रिया आई है।#rameshbidhuri #danishali #loksabha #bjp pic.twitter.com/7XEiX3vhAc
— PUKH RAJ GODARA (@PUKHRAJ49828505) September 23, 2023