ஆபரேசன் சக்சஸ்..! 3 இடங்களில் எலும்பு முறிவு..! துரை வைகோ பதிவு..!
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அறுவை சிகிச்சைக்கு பிறகு நலமுடன் உள்ளதாகவும், தோள்பட்டையில் 3 இடங்களில் ஏற்பட்டிருந்த எலும்பு முறிவை சரிசெய்ய டைட்டானியம் பிளேட் வைக்கப்பட்டுள்ளது. என அவரது மகனும் மதிமுக முதன்மை செயலருமான துரை வைகோ கூறியுள்ளார்.
மதிமுக பொதுச்செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ கடந்த மே 26ம் தேதி நெல்லைக்கு உறவினர் வீட்டிற்கு சென்ற போது வீட்டில் கால் தவறி விழுந்து எலும்பு பட்டையில் தோல்முறிவு ஏற்பட்டது.. அதன் பின் அவர் அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தோள்பட்டையின் கிண்ணம் உடைந்து எலும்புமுறிவு ஏற்பட்டது. அதனால் அவருக்கு தொள்பட்டையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
அதனை தொடர்ந்து இயக்கத் தந்தை தலைவர் வைகோ அவர்களுக்கு சற்றுமுன் அறுவை சிகிச்சை நல்லபடியாக முடிந்தது. தலைவர் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தலைவரின் இடது தோளில் மூன்று இடத்தில் எலும்புகள் உடைந்துள்ளது.
தற்போது அதை சரி செய்ய டைட்டானியம் பிளேட் வைத்திருப்பதாகவும். நாற்பது நாட்கள் ஓய்வுக்கு எடுத்த பின் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட தோள்பட்டை சரியாகி இயல்பு நிலைக்கு வந்துவிடுவார் என துரைவைகோ தெரிவித்துள்ளார்.
தலைவர் அவர்களுக்கு எலும்பு முறிவு அறுவை சிகிச்சை செய்திருப்பதால் தொற்றுகள் ஏதும் ஏற்படாமல் இருக்க ஒரு வாரத்திற்கு பார்வையாளர்கள் யாருக்கும் அனுமதி இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள். ஆகவே, கழகத் தோழர்களும் நலம் விரும்பிகளும் தலைவரை சந்திக்க வருவதை தவிர்த்து ஒத்துழைப்பு தருமாறு துரைவைகோ கேட்டுக்கொண்டுள்ளார்.
நான் மீண்டும் சேவை செய்ய வருவேன்..! உடல்நலம் குறித்து வைகோ பதிவு..! இதையும் படிங்க
– லோகேஸ்வரி.வெ