கட்சியை இணைத்தால் மட்டுமே..! இணையாமல் அது சாத்தியமில்லை..! ஓபிஎஸ் பேட்டி..!
மதுரையில் இருந்து சென்னை வருவதற்காக ஓ.பன்னீர்செல்வம் மதுரை விமான நிலையம் வந்த போது செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
பூரண மதுவிலக்கு அமலுக்கு வருமா :
பூரண மதுவிலக்கு கொண்டு வந்தால் தான் கள்ளச்சாராயத்தை ஒழிக்க முடியும் என்பது எனது கருத்து. அதை அரசு செய்ய வேண்டும் என பதில் அளித்தார்.
ஏற்கனவே நான் தொண்டர்களையும், பொதுமக்களையும் சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறேன். மாண்புமிகு சின்னமாகவும் சந்திக்கிறார் அவரது முயற்சி வெற்றி பெறட்டும். 90 சதவீத தொண்டர்களை சசிகலா இணைத்ததாக கூறியதை நான் வரவேற்கிறேன்.
சட்டம் ஒழுங்கு தமிழகத்தில் சீர்கெட்டு கிடைக்கிறது. அதை சரிப்படுத்தக் கூடிய வழியை முதல்வர் செய்ய வேண்டும் அப்படி செய்யத் தவறினால் அடுத்த முறை ஆட்சிக்கு வருவது கேள்விக்குறியாகி படுதோல்வி அடைவார்.
மத்திய அரசின் புதிய மூன்று கிரிமினல் சட்டங்கள் :
மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய 3 கிரிமினல் சட்டங்களை ஆங்கிலத்தில் கொண்டு வருவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகிறது.
ஓபிஎஸ் ஒருபோதும் அதிமுகவுக்கு உண்மையாக இருந்தது கிடையாது என இபிஎஸ் குற்றச்சாட்டு அளித்துள்ளார். நீண்ட விளக்கத்தை நேற்று அளித்திருக்கிறேன் கட்சி நன்மை தருகிறது இதற்கு மேல் விளக்கம் சொல்ல முடியாது. அவரைப் போல் நான் தெனாவட்டாகவோ, சர்வாதிகாரத்தோடு பேசமாட்டேன் என்பது நாட்டு மக்களுக்கும், கட்சி தொண்டர்களுக்கும் நன்றாக தெரியும். கட்சியை இணைப்பது தான் ஒரே வழி.
இனி வரக்கூடிய தேர்தல்களில் வெற்றி பெற வேண்டுமென்றால் கட்சி இணையாமல் அது சாத்தியமில்லை என்பது என்னுடைய கருத்து அல்லாமல் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின் கருத்தும் கூட.
மன்னிப்பு கடிதம் கொடுத்தாலும் எடப்பாடி ஏற்றுக்கொள்ள மாட்டேன் என கூறியிருந்தார்.. என்னை மன்னிப்பு கடிதம் கொடுக்கச் சொல்வதற்கு அவர் யார்..? பொதுச்செயலாளர் வழக்கு இன்னும் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக தொண்டர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்ற பேச்சு நிலவி வருகிறது.. இரட்டை இலைச்சின்னம் தேர்தலில் அங்கு போட்டியிடவில்லை. அதனால் இரு இலை சின்னத்துடன் கூடிய மாங்கனி அங்கு போட்டியிடுகிறது. அதுதான் நடக்கப்போகிறது.
இந்த இயக்கம் தொண்டர்களால் உருவாக்கப்பட்ட இயக்கம். உறுதியாக ஒரு தொண்டர் அதிமுக தலைமை ஏற்க வேண்டும் என்பதுதான் எனது கருத்து என செய்தியாளர்கள் சந்திப்பில் இவ்வாறே பதில் அளித்தார்.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..