கலைஞரின் நூற்றாண்டு விழாவையொட்டி விவசாயிகளுக்கு பட்டுவளர்ப்பு கருத்தரங்கு
கோபிசெட்டிபாளையத்தில் கலைஞரின் நூற்றாண்டு விழாவையொட்டி விவசாயிகளுக்கு பட்டுவளர்ப்பு குறித்த கருத்தரங்கு நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம், கவுந்தப்பாடி, டி.என்.பாளையம், சத்தி, தாளாவடி உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் மல்பெரி சாகுபடியில் பட்டுக்கூடு உற்பத்தி செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பட்டக்கூடு உற்பத்தி விவசாயிகளுக்கு நவீன நுட்பங்களை விளக்கும் வகையில் பட்டு வளர்ப்பு கருத்தரங்கம் உதவி இயக்குனர் மனீஷா தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக மத்திய பட்டு வாரிய விஞ்ஞானி தாஹீராபீவி கலந்து கொண்டார். தொடர்ந்து, பட்டு வளர்ப்பு நவீன தொழில்நுட்பங்கள் குறித்தும், மல்பெரி சாகுபடியில் பூச்சி தாக்குதல்களை கட்டுப்படுத்த பட்டுவளர்ச்சிதுறை விஞ்ஞானிகள் பரிந்துரை செய்யப்பட்ட மருந்துகளை தெளித்தல், பூச்சி தாக்குதலை இயற்கை முறையில் கட்டுப்படுத்த ஊடுபயிர்கள் பயிரிட வேண்டுதல், இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை மண் பரிசோதனை அவசியம் உள்ளிட்ட பட்டுவளர்ச்சியில் அதிக மகசூல் பெறுவது குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார் .
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
