அட யாருப்பா இந்த சோலைக் குருவிகள்..? கொடைக்கானல் நடந்த ஆச்சரியம்..!!
கொடைக்கானலில் எனும் தனியார் அமைப்பினர் சிட்டி வியூ வனப்பகுதியில் தூய்மை பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகர் பகுதிகள் மட்டுமின்றி பல்வேறு வன பகுதிகளில் சோலைக் குருவிகள் என்னும் தனியார் அமைப்பு சுத்தம் செய்து வருகிறது. இவர்கள் கடந்த மாதங்களில் மட்டும் சுமார் ஐந்து டன்களுக்கு மேல் குப்பைகளை அகற்றி உள்ளனர்.
கொடைக்கானல் சிட்டி வியூ பகுதியில் குப்பைகள் மற்றும் கழிவுகள் கொட்டப்பட்டு வருவதாக சமூக ஆர்வளர்கள் கொடுத்த தகவலின் பெயரில் சோலை குருவி அமைப்பினர் சிட்டி வியூ பகுதியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த பணியில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு நகரை தூய்மைபடுத்தியுள்ளனர். மேலும் வனப்பகுதியில் குப்பைகளை கொட்ட வேண்டாம் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.